துபாயில் வளைகுடா திரைப்பட விழா

By Staff

துபாயில் ஏப்ரல் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறவுள்ள முதலாவது வளைகுடா திரைப்பட விழாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 200 திரைப்படங்கள் விழாவில் கலந்து கொள்ள விண்ணப்பித்துள்ளனவாம்.

துபாய் கம்யூனிட்டி தியேட்டர் மற்றும் கலை மையத்தில் இந்த திரைப்பட விழா நடைபெறவுள்ளது.

இதுவரை சவூதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், கத்தார், குவைத், ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் விழாவில் கலந்து கொள்ள விண்ணப்பித்துள்ளன.

இதுதவிர குறும்படங்கள், ஆவணப் படங்களும் போட்டிக்கு வந்துள்ளன.

இது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளதாக திரைப்பட விழாவின் இயக்குநர் மசூத் அமிர் அல்லா அல் அலி தெரிவித்துள்ளார்.

அரபு திரைப்படத் துறையினருக்கு இந்த வளைகுடா திரைப்பட விழா பெரும் உந்து சக்தியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அரபு நாடுகளின் திரைப்படங்கள் உலக அளவில் பேசப்படக் கூடிய வாய்ப்பும் உருவாகியுள்ளது.

பொழுதுப் போக்குப் படப் பிரிவில் வெற்றி பெறும் படத்திற்கு முதல் பரிசாக டிஎச் 50 ஆயிரமும், 2வது பரிசு பெறும் படத்திற்கு டிஎச் 35 ஆயிரமும் வழங்கப்படும்.

அதேபோல குறும்படம், ஆவணப்படங்களுக்கு டிஎச் 25 ஆயிரம், 20 ஆயிரம், 14 ஆயிரம் பரிசாக அளிக்கப்படும். சிறப்பு நடுவர் விருது பெறும் படத்திற்கு டிஎச் 20 ஆயிரம் பரிசாக அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு www.gulffilmfestival.com என்ற இணைய தளத்தை அணுகலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X