கார்லா: 'சேச்சே, 15 தான்!'

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியை விட அவரது மனைவி ப்ரூனி பற்றித்தான் அங்கு அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நம்ம ஊரில் 'பொறணி' பேசுவது போல ப்ரூனி குறித்து ஏதாவது ஒருவர் ஒவ்வொரு நாளும் 'தாக்கலாகி' வருகிறது.
கல்யாணத்திற்கு முன்பு 30 பேருடன் காதல் கொண்டிருந்தார் ப்ரூனி. 31வது ஆள்தான் சர்கோஸி என்று ஒரு டாக் பிரான்ஸில் உண்டு. தனது காதலர்களை மையமாக வைத்து ஒரு ஆல்பத்தையும் கூட ப்ரூனி சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
ஆனால் தனக்கு 30 காதலர்கள் எல்லாம் இல்லை. 15 பேரை மட்டுமே நான் காதலித்தேன் என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் ப்ரூனி.
சரி, நிர்வாண போஸ் எல்லாம் கொடுத்திருக்கீர்களாமே என்று கேட்டால், அதில் என்ன தவறு. எனது உடலை நான் எக்ஸ்போஸ் செய்துள்ளேன். நான் என்ன மடானைவோப் போல ஓவராக ஒன்றும் போகவில்லையே என்று போகிற போக்கில் மடோனாவைபோட்டுத் தாக்கியுள்ளார் ப்ரூனி.


Click it and Unblock the Notifications











