ஜாக்கி சான் இன்று சென்னை வருகை

கலைஞானி கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் படத்தின் ஆடியோ நாளை சென்னையில் நடைபெறும் கோலாகலமான விழாவில் வெளியிடப்படுகிறது.
இதில் ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிடுகிறார்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஜாக்கி சான் சென்னை வருகிறார். சென்னைக்கு சான் வருவது இதுவே முதல்முறையாகும். இன்று இரவு 10 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான மூலம் சென்னை வருகிறார் சான். இரவு அவர் தாஜ் ஹோட்டலில் தங்குகிறார்.
நாளை நடைபெறும் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார். அதன் பின்னர் தாயகம் புறப்பட்டுச் செல்கிறார்.
ஜாக்கி சானை வரவேற்க தசாவதாரம் படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











