ஜாகுவாரின் அடுத்த ஸ்டன்ட்!

By Staff

என் மகனைக் கடத்தப் போவதாக அஜீத் ரசிகர்கள் மிரட்டுகிறார்கள் என்ற புதிய புகாரோடு மீண்டும் பரபரப்பு செய்திப் பக்கத்தை ஆக்கிரமித்துள்ளார் ஜாகுவார் தங்கம். இதுகுறித்து எம்ஜிஆர் நகர் போலீசில் புகாரும் தந்துள்ளார்.

தமிழ் திரை உலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் அஜீத் விழாக்களுக்கு வரும்படி நடிகர்களை மிரட்டுகிறார்கள் என்று கூறியதும், அதற்கு ரஜினி ஸ்பாட்டிலேயே பாராட்டு தெரிவித்ததும், அதைக் கண்டித்து தாறுமாறாக பேட்டிகள் கொடுக்கு ஜாகுவார் பாப்புலர் ஆக முயற்சித்ததும் தெரிந்ததே.

இவரது பேட்டியால் ஆத்திரம் அடைந்த ரஜினி, அஜீத் ரசிகர்கள் ஜாக்குவார் தங்கத்தின் வீட்டில் கல்வீசித் தாக்கியதாக அவர் புகார் கொடுத்த வண்ணம் உள்ளார். போலீசில் கொடுத்தது போக, இப்போது அஜீத்தை கைது செய்யக் கோரி நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஜாக்குவார் தங்கத்தின் வீட்டுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாம். இதில் அவரது மகன் விஜய சிரஞ்சீவியைக் கடத்தப் போவதாக அஜீத் ரசிகர் ஒருவர் மிரட்டியுள்ளாராம்.

ஜெயந்தன் நாயர், சென்னை-18 என்ற முகவரியில் இருந்து இந்தக் கடிதம் வந்துள்ளதாம்.

இந்தக் கடிதத்தில் இப்படி உள்ளதாம்:

பகவதி அம்மன் கோவில் துணை.

ஜாக்குவார் தனது கவனத்துக்கு...

டேய், ஜாக்குவார் தங்கம், எங்க தலகிட்ட மோதினா, சென்னையில் நீ இருக்க முடியாது. எச்சரிக்கை. உனது மகனை கடத்தி.... செய்து விடுவோம். அடுத்து தல தாண்டா முதல்வர். எங்கள் அல்டிமேட் ஸ்டாரிடம் நீ சரியாக மாட்டிக் கொண்டாய்.

இனி, நீயும், சரத்குமாரும் நெல்லைக்கு செல்ல வேண்டியதுதான். உன் கதை முடிந்தது என்று நினைத்துக் கொள். இனி உன் குடும்பம்?" என்று உள்ளதாம்.

இதுகுறித்து ஜாக்குவார் தங்கம் எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரணை நடத்தி வருகிறார். மிரட்டல் கடிதம் அனுப்பிய அஜீத் ரசிகரை பிடிக்க தேடுதல் வேட்டையை போலீசார் துரிதப்படுத்தியுள்ளனர்.

ஜாகுவாரின் மகன் விஜய சிரஞ்சீவி, 'சூர்யா' என்ற படத்தில் ஹீரோவாக நடித்ததும், அந்தப் படம் தியேட்டர்களுக்கு போன வேகத்தை விட திரும்பி வந்த வேகம் மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X