ஸ்டெப்மாம் படத்துக்காக முடியை வெட்டும் கரீனா கபூர்

By Staff

Kareena Kapoor
ஆங்கிலத்தில் வெளியான ஸ்டெப்மாம் படத்தின் ரீமேக் படத்துக்காக தனது முடியை வெட்டிக் கொள்ளப் போகிறாராம் கரீனா கபூர்.

பாலிவுட்டின் புதுமை நாயகியாக மாறி வருகிறார் கரீனா கபூர். உடலை படு ஒல்லியாக்கி அனைவரையும் வியக்க வைத்தார். காஸ்ட்யூம் உள்ளிட்டவற்றிலும் இப்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். முன்பை விட கெட்டப் மாற்றத்தில் அதீத ஆர்வம் காட்டுகிறார்.

ஸ்டைல் ஐகான் என்ற லெவலுக்கு மாறி விட்டார் கரீனா. இதுகுறித்து அவர் பெருமையாகவும் கூறுகிறார். தனது கெட்டப் மாற்றத்திற்காகவும், புதுப் புது ஸ்டைலைப் பிடிக்கவும் பாரீஸ் உள்ளிட்ட பல்வேறு பேஷன் தளங்களுக்கும் பயணம் மேற்கொள்ளப் போகிறாராம் கரீனா.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆமாம், உண்மைதான். இதை தவிர எனக்கு வேறு வழியே இல்லை. நான் ஒரு பேஷன் திவா போலாகி விட்டேன். ஒரே மாதிரியாக நடித்துப் போரடித்து விட்டது.

எனது டிரைஸ் டிசைனர் அகி நருலா, படத்துக்குப் படம் என்னை விதம் விதமாக காட்டி எனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கி விட்டார். அதிலிருந்து என்னால் மீள முடியாது.

எனவே அவர் நிர்ணயித்து வைத்து விட்ட தரத்திற்கு நான் மாறியே ஆக வேண்டும்.

கம்பக்த் இஷ்க் படத்துக்குப் பின்னர் நடித்த குர்பான் படத்திலும் என்னை விசேஷமாக காட்டியுள்ளார் நருலா.

எனக்காக கடை கடையாக ஏறி இறங்கி டிரஸ்களையும், பிற மேக்கப் பொருட்களையும் மெனக்கெட்டு வாங்கி வருகிறார். இது ஒரு படமாக (குர்பான்) இருந்தாலும் கூட நான் மிக மிகக் கடினமாக உழைத்துள்ளேன்.

ஸ்டைல், பாடி லாங்குவேஜ், டான்ஸ் என அனைத்திற்கும் நான் மெனக்கெட்டு உழைத்துள்ளேன். என்னைப் பார்க்கும் ரசிகர்கள் ஒரு விநாடி மூச்சு விட முடியாமல் திணறிப் போய் விட வேண்டும். அப்படி ஒரு தோற்றத்தை இப்படத்தில் நான் கொண்டு வர கடுமையாக பாடுபட்டுள்ளேன்.

விரைவில் மிலன், பாரீஸ், லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களுக்கு பேஷன் டிசைனிங் தொடர்பாக போகவுள்ளேன்.

நான் இப்போதெல்லாம் வெளிநாடுகளுக்குப் போனால் லேட்டஸ்டாக வந்த டிரஸ், மேக்கப் பொருட்கள் குறித்துதான் அதிக அக்கறை காட்டுகிறேன். கடை கடையாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறேன்.

நருலாவுக்காக நான் எனது ஆஸ்தான டிசைனரான மனீஷ் மல்ஹோத்ராவை மறந்து விட்டதாக கூற முடியாது. அடுத்து 3 இடியட்ஸ் மற்றும் ஸ்டெப்மாம் படத்தின் ரீமேக்கில் மல்ஹோத்ராவுடன் நான் இணைகிறேன். ஸ்டெப்மாம் படத்துக்காக நான் முடியைக் கூட வெட்டிக் கொள்ளப் போகிறேன்.

படத்தின் தன்மைக்கேற்பதான் நான் டிரஸ் செய்கிறேன், மேக்கப் போடுகிறேன். ஜப் வி மெட் படத்தில் நான் சாதாரண சல்வார் கமீஸில்தான் வந்தேன். ஆனால் குர்பான், 3 இடியட்ஸ் படங்களில் வித்தியாசம் காட்டியுள்ளேன்.

எப்படி டிரஸ் போட்டாலும், ஓம்காரா படத்தில் வந்தது போலத்தான் நடிக்க விரும்புகிறேன். அதுபோன்ற கேரக்டர்கள்தான் என்னை வெகுவாக கவருகின்றன என்கிறார் கரீனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X