twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமெரிக்காவில் உருவாகும் காதல் கதை!

    By Staff
    |

    Lekha Rathnakumar
    முன்னணி விளம்பரப் பட இயக்குநரும், சோனாட்டன் இசை நிறுவனத்தின் இந்திய பிரதிநிதியுமான லேகா ரத்னகுமார் தனது முதல் திரைப்பட முயற்சியில் முழு வீச்சில் இறங்கிவிட்டார்.

    இளமையும் ஸ்டைலும் சரிவிகிதத்தில் கலந்து புத்தம் புதிய காதல் கதைதான் இந்தப் படமாம்.

    படத்தின் பெரும்பகுதி அமெரிக்காவில் நடப்பது போல கதை என்பதால், இதுவரை தமிழ் சினி்மா கண்டிராத புத்தம் புதிய லொக்கேஷன்களில் படமாக்கப் போகிறாராம் லேகா. குறிப்பிட்ட சில காட்சிகள் மட்டும் தமிழகத்தின் எழில்கொ்சும் தென்மாவட்டங்களில் படமாக்குகிறார்களாம்.

    அமெரிக்க லொக்கேஷன்களை முடிவு செய்ய இப்போது அமெரிக்கா செல்லும் லேகா, தனது படத்துக்கான திட்டமிடலை ஏற்கெனவே மிகத் தெளிவாக முடித்து வைத்திருக்கிறார்.

    அமெரிக்காவில் தான் படமாக்கப் போகும் காட்சிகளை முன்கூட்டியே புகைப்படங்களாக தயார் நிலையில் வைத்திருக்கும் லேகா, அந்தப் புகைப்படங்களில் உள்ள தெளிவும் வண்ணக் கலவையும் நூறுசதவிகிதம் திரையிலும் வரும் என்கிறார்.

    இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு, அதன் பட்ஜெட். 'அமெரிக்க ஷூட்டிங்கில் கதாநாயகன், கதாநாயகி, இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்பட ஜஸ்ட் 8 பேர் இருந்தால் போதும், மொத்தப் படப்பிடிப்பும் முடிந்துவிடும். காரணம் செட் தேவையில்லை, வேறு தேவையற்ற வேலைகள் இருக்காது. அதனால் தானாகவே பட்ஜெட்டும் குறைந்துவிடும். இதுதான் நம்ம பார்முலா!' என்கிறார் லேகா ரத்னகுமார்.

    முதல் முறை படமெடுக்க வருகிறீர்கள்... நாயகன் நாயகி புதுமுகமா... அல்லது பிரபல முகமா?

    'பிரபல முகங்கள்தான். ஆனால் இப்போது முழு விவரங்களும் சொல்முடியாது. அமெரிக்கப் பயணத்தை முடித்துவிட்டு வந்து முழு விவரங்களையும் சொல்கிறேன். இப்போதைக்கு முன்னணி ஹீரோ-ஹீரோயின் நடிக்கிறார்கள் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

    படத்தில் ஒரே பாடல்தான். அது இரு முறை வரும். ஒன்று முழுக்க முழுக்க நம்ம ஊர் ஸ்டைலில் இருக்கும். இன்னொரு வர்ஷன் ஹாலிவுட் ஸ்டைலில் ஆர்ககெஸ்ட்ரேஷன் செய்யப்படும். இந்த ஆர்க்கெஸ்ட்ரேஷனை செய்யவிருப்பது உலகப் புகழ்பெற்ற சோனோட்டன் இசைக்குழு. அதேபோல ஹாலிவுட்டில் எங்கள் படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட மொத்த வேலையையும் செய்யப்போவது கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற நிறுவனமான 'பில்ம் லாஞ்ச்'.

    தமிழ் மணமும் ஹாலிவுட் தரமும் இணைந்த புதிய அனுபவம் தரும் படமாக எனது முதல் படைப்பு இருக்கும் என்கிறார் லேகா.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X