மாளுவுக்கு வயசு 30!

வாளை மீனு படத்திற்கு முன்பு வரை சாதாரணமாக நடித்துக் கொண்டிருந்த மாளவிகா அதன் பின்னர் விதம் விதமான கேரக்டர்களில் நடித்து அசத்தினார். கவர்ச்சியிலும் புதிய கோணம் காட்டி வந்தார்.
இந்த நிலையில் திடீரென அவருக்கு கல்யாணமாகி விட்டது. கணவர் சுமேஷ் மேனனுடன் மும்பையில் செட்டிலாகி விட்ட மாளவிகா இப்போது ஒரு குழந்தைக்கும் தாயாகி விட்டார்.
மீண்டும் நடிக்க வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கு் மாளவிகா, சமீபத்தில் தனது பிறந்த நாளை மும்பை வீட்டில் கொண்டாடினார்.
தன் குடும்பத்தினர், கணவர் குடும்பத்தார், நெருங்கிய நண்பர்களை அழைத்து விமரிசையாக கொண்டாடியுள்ளார் மாளவிகா. நடிகை ரீமா சென் முக்கியமாக கலந்து கொண்டாராம்.
வழக்கமாக மும்பை பார்ட்டிகளில் ரீமா இருந்தால் அது அமர்க்களமாக மாறி விடும். ஆனால் மாளவிகாவின் பிறந்த நாள் பார்ட்டியில் சமர்த்துப் பெண்ணாக கம்மென்று கலந்து கொண்டாராம் ரீமா.
சரி, என்ன வயது இப்போதாவது சொல்லுங்களேன் என்று கேட்டால், 30 என்கிறார் மாளவிகா புன்னகையுடன்.
அதுதானே, நடிக்கும் வரை 18க்குக் கீழே இறங்கவே மாட்டார்கள். கல்யாணமாகி செட்டிலாகி விட்டால் உண்மை மட்டுமே பேசுவார்கள்...


Click it and Unblock the Notifications











