'கவர்ச்சி எக்ஸ்பிரஸ்' மேகா ராஜ்!

இப்போதைக்கு நாயகி ரெடி. (அதானே முக்கியம்!) புத்தம் புதுசாக மும்பையிலிருந்து தமிழுக்குக் கூட்டி வந்திருக்கிறார் ரத்னகுமார்.
அம்மணியின் பெயர் மேகா ராஜ். குஷ்புவும் பூஜா பட்டும் சரிவிகித்த்தில் கலந்த மாதிரி அப்படியொரு அபாரத் தோற்றம்.
தமிழ் சினிமாவுக்குதான் இவர் புதிதே தவிர, விளம்பர உலகத்துக்கு இவர் மிகவும் பரிச்சயமானவர். கோல்கேட், பார்லே ஜி, சிட்டி வங்கி, ரோட்டோமேக் என பிரபல நிறுவனங்களின் 100க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்து அசத்தியவர் மேகா.
அனுபம் கெர் நடிப்புப் பள்ளியில் படித்த மேகா ராஜின் தந்தை ராஜ் இஸ்ரானி போஜ்புரியில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். அம்மா மாடல் கோ ஆர்டினேட்டர்.
கலைக் குடும்பம் என்பதால் மேகாவும் 'தில் தோ பாகல் ஹை' படத்தில் சுட்டிப் பெண்ணாகத் தோன்றி தன் கலை ஆர்வத்தை அப்போதே காட்டிவிட்டார். ஆனாலும் தனக்கு இந்திப் படங்கள் சரிப்படாது என்று கூறிவிட்டு தமிழைத் தேடி வந்திருக்கிறது இந்த மும்பை ஓவியம்.
அப்படி என்ன தமிழ் மீது காதல்?
அது... சின்ன வயசிலிருந்தே தமிழ் படங்கள் பிடிக்கும். போன வருஷம் சிவாஜி பார்த்தேன். பிரமிச்சிப் போய்ட்டேன். இந்தியாவில் உலகத் தரத்துக்கு சவால் விடும் வகையில் க்ளீன் பொழுது போக்குப் படம் கொடுக்க முடியும் என்பதற்கு ரஜினி சாரின் சிவாஜி ஒரு உதாரணம்.
இன்னொன்று, தமிழ் படவுலகின் புரபஷனல் அப்ரோச் வேறு எங்கும் கிடையாது. அதனால்தான் எத்தனையோ இந்திப் பட வாய்ப்புகளை உதறித் தள்ளி விட்டு தமிழுக்கு வந்துவிட்டேன், என்கிறார் மேகா.
கதைக்குத் தேவையான கவர்ச்சியை நிபந்தனை போடாமல் காட்டவும் தயாராக இருக்கிறாராம்.
லேகா ரத்னகுமார் இயக்கும் இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கக் கூடும் என்று தெரிகிறது. இந்தப் படத்தின் கதையை ரத்னகுமாரின் பிஸினஸ் பார்ட்னர் எழுதியுள்ளார்.
விரைவில் படம் குறித்த அறிவிப்பு வரும் என்கிறார் லேகா...
வரட்டும் வரட்டும்!


Click it and Unblock the Notifications











