ஈழத் தமிழர்களுக்கு என்றும் துணையாக இருப்போம் - நடிகர் சங்கம்

By Staff

ஈழத் தமிழர்களுக்கு என்றென்றும் துணையாக இருப்போம் என தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடிகர் சங்க அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு கூடியது.

சங்கத் தலைவர் சரத்குமார் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் ஜெயம் ரவி, நெப்போலியன், விஜயகுமார், பாண்டியராஜன், செந்தில், சார்லி, மன்சூர்அலிகான், எஸ்.வி. சேகர்,

ஜே.கே.ரித்தீஷ் எம்.பி..

ஜே.கே.ரித்தீஷ், கே.ராஜன், குண்டு கல்யாணம், கஞ்சா கருப்பு, சின்னி ஜெயந்த், ரியாஸ் கான், ஜெயகோவிந்தன், அஸ்வின் சேகர், சின்னையன், நடிகைகள், மும்தாஜ், சத்யபிரியா, பத்மபிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

பொதுக்குழுவில் தவறாது பங்கேற்குமாறு ரஜினி, கமல், விஜய், விக்ரம், அஜீத், சூர்யா, நயன்தாரா, திரிஷா, அசின், பாவனா, பிரியாமணி உள்பட சங்க உறுப்பினர்கள் 2500 பேருக்கு சரத்குமார், ராதாரவி கடிதம் அனுப்பியிருந்தனர்.

தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த்துக்கும் அழைப்பு விடப்பட்டிருந்தது. ஆனால இவர்களில் ஒருவர் கூட தலை காட்டவில்லை.

இதைக் குறிப்பிட்டு ராதாரவி கண்டித்துப் பேசினார். அவர் பேசுகையில், நடிகர் நடிகைகளுக்கு பிரச்சினைகள் வந்தால் சங்கம் தலையிட்டு தீர்த்து வைக்கிறது. ஆனால் பெரிய நடிகர் நடிகைகள் பலர் சங்க நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை.

நடிகர் சங்கம் எங்கே இருக்கிறது என்று கூட சிலருக்கு தெரியாது. இப்படி ஒத்துழைக்காமல் இருப்பது சரியல்ல.

சங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும், அப்போது தான் உங்களை நாங்கள் காப்பாற்ற முடியும் என்றார்.

பின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாமல், தமிழ் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள் அனைவரும் உடனடியாக நடிகர் சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

- அனைத்து நடிகர் நடிகைகளும் தான் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளருடன் கண்டிப்பாக எழுத்து மூலம் ஒப்பந்தம் போட வேண்டும். ஒப்பந்தம் போடாத உறுப்பினர்களுக்கு ஏற்படும் பிரச்சினையில் சங்கம் தலையிடாது.

- பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் தமிழ் மக்கள் வாழ்வு மலர தென்னிந்திய நடிகர் சங்கம் என்றும் உறு துணையாக நிற்கும்.

- இலங்கை தமிழர்கள் நிதிக்கு 62 லட்சத்து 69 ஆயிரத்து 8 ரூபாயை நிதியாக அளித்த உறுப்பினர்களுக்கு நன்றி.

ஜூலை 12ல் தேர்தல்...

- 2009 2012 ம் ஆண்டிற்கான நடிகர் சங்க தேர்தல் ஜூலை 12 ந் தேதி நடைபெறும்.

- வெளியூரில் நடக்கும் படப்பிடிப்புகளில் மதுரை, சேலம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்ட நாடக நடிகர் சங்க உறுப்பினர்களை துணை நடிகர்களாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

- பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் நெப்போலியன், ஜே.கே.ரித்தீஷ் ஆகியோரை பொதுக்குழு வாழ்த்துகிறது.

- நடிகர் சங்கதுக்கு ஊதியத்தில் இருந்து 2.5 சதவீதம் தொகையை அளித்த ராதிகா சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கருக்கு பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X