மறுபடியும் பாலைவனச்சோலை!

By Staff

Karthika
அந்தக் காலத்து கல்லூரி மாணவ, மாணவியர், இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற பாலைவனச்சோலை மீண்டும் ரீமேக் ஆகிறது.

28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் பாலைவனச்சோலை. ராபர்ட்- ராஜசேகர் இணைந்து இயக்கிய இப்படத்தில் சந்திரசேகர், ராஜீவ், ஜனகராஜ், தியாகு, சுஹாசினி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜனகராஜ், தியாகு ஆகியோருக்கு இதுதான் முதல் படமே.

பெரும் வெற்றி பெற்ற இப்படம் இப்போது ரீமேக் ஆகிறது. சுஹாசினி நடித்த வேடத்தில் திண்டுக்கல் சாரதி புகழ் கார்த்திகா நடிக்கவுள்ளார்.

சந்திரசேகர் கேரக்டரில் நிதின் சத்யா, ராஜீவ் கேரக்டரில் அபினய், ஜனகராஜ் கேரக்டரில் புதுமுகம் சாம்ஸ் நடிக்கின்றனர். இன்னொருவரான கைலாஷ் கேரக்டரில் புதுமுகம் சஞ்சீவ் நடிக்கிறார். தியாகு வேடத்தில் கலக்கப் போகிறவர் சத்யன்.

கே.எஸ்.ரவிக்குமாரின் உதவியாளரான தயாளன் இப்படத்தை இயக்குகிறார்.

பாலைவனச்சோலையில் இடம் பெற்ற மேகமே மேமே பாடலும், ஆளான ஆளு ஆகிய இரு பாடல்களையும் ரீமிக்ஸ் செய்கிறார்கள். இதுதவிர புதிதாக ஐந்து பாடல்களை எழுதியுள்ளார் வைரமுத்து.

படப்பிடிப்பு தொடங்கி விட்டது. கோடை விடுமுறைக்கு ரசிகர்களைக் குளிர்விக்க வருகிறதாம் பாலைவனச்சோலை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X