ஸ்லம்டாக் பார்க்க ஒபாமா ஆர்வம்!

இந்தப் படத்தைக் பார்க்கப் பலரும் ஆவலுடன் இருப்பதைப் போலவே, உலகின் பவர்புல் மனிதரான அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் ஆர்வம் காட்டி வந்தாராம்.
ஒபாமா சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்ல, நல்ல சினிமா ரசிகரும் கூட. சமீபத்தில் வெளியான புதிய படங்கள் பெரும்பாலானவற்றைப் பார்த்துவிட்டாராம் ஒபாமா. ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தையும் பார்க்க ஆர்வம் காட்டி வந்தாராம்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறுகையில், ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தை அவர் பார்த்துவிட்டாரா என்று தெரியவில்லை. ஆனால் அந்தப் படத்தைப் பார்க்கும் ஆர்வம் அவருக்கு இருந்தது எனக்குத் தெரியும் என சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications