மன்மதன் அம்பு... ரஜினி வாழ்த்து!

By Sudha

கமல்ஹாஸன் நடித்து, டிசம்பர் 23-ம் தேதி திரைக்கு வந்த மன்மதன் அம்பு திரைப்படத்தை, புதன்கிழமை பார்த்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாஸனின் ராஜ்கமல் ப்ரிவியூ திரையரங்கில் சென்று இந்தப் படத்தைப் பார்த்ததுடன், நடிகர் கமல்ஹாஸனை பாராட்டினார் ரஜினி.

வசனங்கள் பிரமாதமாக இருந்ததாகவும், குறிப்பாக ஒரு காட்சியில் திரிஷாவிடம் மாதவன் 'இந்த உலகத்தையே உன் காலடியில் போடுறேன்' என்பார். அதற்கு திரிஷா, 'உலகத்தை யாரும் யார் காலடியிலும் வைக்க வேண்டாம். அது அங்கேதான் இருக்கிறது. பிச்சைக்காரர்கள் காலடியில் கூட உலகம் இருக்கிறது' என்று பதில் அளிப்பார். இந்த வசனம் தன்னை மிகவும் கவர்ந்ததாக ரஜினி சொன்னார்!

இயக்குநர் கே பாலச்சந்தர், நடிகர்கள் பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் படம் பார்த்தனர்.

மன்மதன் அம்பு படம் உலகெங்கும் வியாழக்கிழமை வெளியானது. கமல் - த்ரிஷா, மாதவன் நடித்துள்ள இந்தப் படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார். உதயநிதி தயாரித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X