'சியர்ஸ்' ... ராக்கி!

இந்திய கிரிக்ெகட் வாரியத்தின் போக்கைக் கண்டித்து பிறந்ததுதான் ஐசிஎல் எனப்படும் இந்தியன் கிரிக்கெட் லீக். கபில்தேவைத் தலைவராக கொண்டு இயங்கி வரும் இந்த அமைப்பு சத்தம் இல்லாமல் கலக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த அமைப்பின் சார்பில் பிரத்யேக சியர் லீடர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழகிகள் குழுவுக்கு ஐசிஎல் ஸீப்ராஸ் என பெயரிட்டுள்ளனர். இந்தக் குழுவின் 'ராணி'யாக, பாலிவுட் கவர்ச்சிப் புயல் ராக்கி சாவ்ந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 10ம் தேதி ஹைதராபாத்தில் ஐசிஎல் லீக்கின் 2வது சீசன் தொடங்குகிறது. அன்று முதல் நடைபெறும் ஒவ்வொரு போட்டியிலும் ராக்கி தலைமையிலான இந்த சியர் லீடர் குழு அழகிகள் ரசிகர்களை மகிழ்விப்பார்கள்.
தனது புதிய அசைன்மென்ட் குறித்து ராக்கி கூறுகையில், இது வேடிக்கைக்கான நிகழ்ச்சி அல்ல. இதுவும் கூட ஒரு விளையாட்டுதான். இதுவரை இந்தியாவில் இந்தியர்களைக் கொண்ட சியர் லீடர் குழுக்கள் எதுவும் இல்லை. தற்போது முதல் முறையாக, ஐசிஎல் புண்ணியத்தில் இந்திய அழகிககளைக் கொண்ட சியர்லீடர் குழு உருவாக்கப்பட்டுள்ளது என்றார் ராக்கி.
ராக்கி தலைமையிலான அழகிகள் பட்டியலில் எட்டு பேர் இடம் பெற்றுள்ளனர். ரித்திகா, ஜெஸ்ஸிகா, ப்ரீத்தி, கீதா, ரிச்சா, ஷராவ்ரி, ஜெயஸ்ரீ, சங்கீதா ஆகியோர் அவர்கள்.
கர்கான், பன்ச்குலா, ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெறும் போட்டிகளில் இவர்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்கள்.


Click it and Unblock the Notifications











