ரக்ஷிதா 4 மாசம்!

தம் படம் மூலம் தமிழில் அறிமுகமான ரக்ஷிதா, பின்னர் போதிய வாய்ப்பின்றி கன்னடப் படவுலகம் சென்றார். இடையில் விஜய்க்கு ஜோடியாக மதுர படத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு தமிழில் படங்களே இல்லாமல் போனது.
கன்னடத்தில் அவர் நடித்த ஜோகி (பரட்டை என்கிற அழகு சுந்தரம்) சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து எக்ஸ்க்யூஸ் மீ என்ற படமும் ஹிட் பட வரிசையில் சேர்ந்தது. நம்பர் ஒன் நாயகி என்ற அந்தஸ்தும் கிடைத்தது. ஆனால் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் இயக்குநர் பிரேமின் காதலில் விழுந்தார் ரக்ஷிதா. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இப்போது ரக்ஷிதா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications