தமிழ் தாய்மார்கள் பதில் சொல்வார்கள்! - ரம்லத்

என் கணவர் பிரபு தேவாவை அபகரிக்க நினைக்கும் நயன்தாராவை நேரில் பார்த்தால் அடிப்பேன் என்று நேற்று முன்தினம் கூறியிருந்தார் ரம்லத்.
இதற்கு பதிலளித்த நயன்தாரா, என்னை அடிக்கவோ, திட்டவோ ரம்லத்துக்கு அருகதை இல்லை என்று பதில் கூறியிருந்தார்.
இதற்கு மீண்டும் காட்டமான பதில் தந்துள்ளார் ரம்லத்.
இன்று இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
"நான் மனம் உடைந்து போய் இருக்கிறேன். என் குழந்தைகளுடன் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கும் குழந்தைகளுக்கும் எல்லாமே என் கணவர்தான். எங்களுக்கு மட்டும்தான் அவர் சொந்தம். யாரும் பங்கு போட முடியாது. 15 வருடங்களாக சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறோம். எங்களுக்குள் சிறு மன வருத்தம் கூட இதுவரை வந்ததில்லை.
என் மனக்குறையை வெளியிட்டேன். அதை சொல்ல எனக்கு அருகதை இல்லை என்று நயன்தாரா சொல்லி இருப்பதாக செய்தி வந்துள்ளது. பிரபுதேவாவை திருமணம் செய்து 15 வருடம் குடும்பம் நடத்திவள் நான். 3 குழந்தைகளைப் பெற்ற ஒரு தாய். நயன்தாரா போல அடுத்தவள் புருஷனை அபகரிக்கவில்லை.
நயன்தாராவின் திமிர் பேச்சுக்கு என் தமிழ்நாட்டு தாய்மார்களும், சகோதரிகளும் பதில் அளிப்பார்கள். நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. தமிழகத்தில் உள்ள மாதர் சங்கங்கள் என் கண்ணீரைத் துடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்...", என்றார்.


Click it and Unblock the Notifications











