ராணாவில் ரஜினியின் வில்லி ரேகா!

By Shankar

ராணா படம் துவங்குவதற்குள் அதில் நடிக்கும் ஹீரோயின்கள் பற்றி இன்னும் செய்திகள் வரப் போகின்றனவோ... மாதுரி தீக்ஷித் விவகாரம் முடிந்து, இப்போது ரேகா அத்தியாயம் ஆரம்பித்துள்ளது.

ரஜினிக்கு எதிராக பெண்கள் வில்லியாக நடித்த படங்கள் ஓஹோவென்று ஓடியுள்ளன. எனவே இந்தப் படத்திலும் முக்கிய எதிரி வேடத்தில் ஒரு பெண்பாத்திரம்தான் வருகிறதாம். இந்த வேடத்தில் நடிக்கிறாராம் பிரபல இந்தி நடிகை ரேகா.

ரஜினி கடைசியாக நடித்த நேரடி இந்திப் படமான புலந்தியில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதற்கு முன் 'பூல் பனே அங்காரே' படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்திருந்தார் ரேகா.

ராணா படம் தமிழிலும் இந்தியிலும் நேரடியாக, இருமொழிப் படமாக எடுக்கப்படுவதால், அதில் நடிக்கும் நாயகிகள் பாலிவுட் ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்களாக இருப்பது நல்லது என்பதால்தான், தீபிகா, ரேகா என தேடிப் போய் ஒப்பந்தம் செய்கிறார்களாம்.

படத்தின் வில்லனும் இந்தி முகம்தான். பெயர் சோனு சுத். இவர் சந்திரமுகியில் ரஜினி கையால் 'அடிவாங்கிய' வில்லன்!

என்னமோ... ராவணன் மாதிரி, தமிழும் இல்லாமல் இந்தியும் இல்லாமல் இரண்டும்கெட்டான் படமாகாமலிருந்தால் சரி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X