நடிகை அஞ்சலிதேவிக்கு சதாபிஷேகம்... சாய் பாபா வருகிறார்!

1946ம் ஆண்டு கொல்லபாம என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சலிதேவி.
எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் போன்ற பழம்பெரும் கதாநாயகர்களுக்கு ஜோடியாக 350 படங்களில், கதாநாயகியாக நடித்தவர்.
கணவனே கண்கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம், முதல் தேதி, மன்னாதி மன்னன், சக்ரவர்த்தி திருமகள் உள்பட தமிழ்- தெலுங்கு- இந்தி ஆகிய 3 மொழிகளில், 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
அஞ்சலிதேவி புகழின் உச்சத்தில் இருந்தபோது, ஆதிநாராயணராவ் என்ற பிரபல தெலுங்கு இசையமைப்பாளரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.
அஞ்சலிதேவிக்கு இப்போது 80. எனவே அவருக்கு, சதாபிஷேகம் நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இந் நிகழ்ச்சி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் மண்டபத்தில், வருகிற 27ம் தேதி நடக்கிறது.
அதில் புட்டபர்த்தி சாய் பாபா கலந்துகொண்டு, அஞ்சலிதேவியை ஆசிர்வதிக்கிறார்.
இந் நிகழ்ச்சியில் ரஜினி உள்ளிட்ட தமிழ்- தெலுங்கு பட உலக பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.


Click it and Unblock the Notifications











