ரஜினியுன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?-சாய்னா ஆர்வம்
ரஜினி படத்தில் வாய்ப்புக் கிடைத்தால், எந்த நிமிடமும் நடிக்க ரெடி என்று அறிவித்துள்ளார் பிரபல பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நெவால்.
ஹரியானாவைச் சேர்ந்தவர் சாய்னா. இந்தியாவின் புகழ்பெற்ற பாட்மின்டன் வீராங்கனையாகத் திகழ்பவர். கேல்ரத்னா விருது பெற்றவர்.
இப்போது நிறைய விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சினிமாவில் நடிக்கும் ஆர்வம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
"உண்மையாகவே சினிமாவில் நடிக்க ஆர்வம்தான். ஆனால் சும்மா வந்தோம் போனோம் என்று இருக்கக் கூடாது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைக்குமா சொல்லுங்கள்... இப்போதே, ஒப்பந்தத்தில் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்திட நான் ரெடி. அவர் படத்தில் நடிக்க எந்தப் பெண்தான் மாட்டேன் என்பாள்!
அவரைப் போன்ற சாதனையாளர் படத்தில் நடித்தால்தான் நமக்குப் பெருமை. இந்த வயதிலும் அவர் தோற்றம், சுறுசுறுப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. அவரது மாஸ் படங்களை பார்க்கும்போது, நமக்குள் புதிய உற்சாகம் வந்துவிடுகிறது," என்றார்.


Click it and Unblock the Notifications











