லிம்கா சாதனைப் புத்தகத்தில் 'சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி'!

By Chakra

Sanikizhamai Sayangalam 5 Mani
'சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி'... ஏதோ நிகழ்ச்சிக்கான நேரக் குறிப்பல்ல இது... தமிழில் அடுத்து வரவிருக்கும் ஒரு புதிய திரைப்படம்.

கொஞ்ச நாளைக்கு முன்பு 'மதுரை டூ தேனி வழி : ஆண்டிபட்டி' என்றொரு படம் வந்தது. யதாரத்த சினிமா விரும்பிகளின் ஆதரவைப் பெற்ற படம் அது.

இந்தப் படத்தைத் தயாரித்த எஸ்.பி.எஸ் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம்தான் இந்தப் புதிய படத்தையும் தயாரிக்கிறது.

ஒரு சனிக்கிழமை சாயங்காலம் 5 மணிக்கு ஆரம்பித்து மறு சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி வரை நடக்கும் ஒருவாரகால சம்பவங்களை க்ரைம், த்ரில்லர், ஆக்ஷன், காதல்,காமெடி கலந்து விறுவிறுப்பாக சொல்லி படத்துக்கு கதை, வசனத்தை எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் ரவிபாரதி.

'மதுரை டூ தேனி வழி : ஆண்டிபட்டி' படத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து பலருடைய பாராட்டுகளை பெற்ற ஒளிப்பதிவாளர் எஸ்.பி.எஸ் குகன் இந்தப்படத்தில் HDSLR என்ற புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பெரும்பாலும் ஹாலிவுட் படங்களில் ஒருசில காட்சிகளுக்காகப் பயன்படுத்தப்படும் இந்த HDSLR என்ற டிஜிட்டல் தொழில்நுட்பம் இந்தியாவில் முதல்முறையாக இந்தப் படத்தில்தான் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக HDSLR தொழில்நுட்பம் முழுமையாக பயன்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் இந்தப்படம் 'லிம்கா சாதனை புத்தகத்தில்' இடம் பெறுவதற்காக பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது, லிம்கா உலக சாதனைப் புத்தக பிரதிநிதிகள் சென்னை வந்து நிகழ்ச்சியைப் பதிவு செய்தனர்.

படத்திற்கு ஜே.வி. இசையமைக்க, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை உதய் கவனிக்கிறார்.

திங்கள்கிழமை சென்னை ஃபோர்பிரேம்ஸில் நடந்த இந்தப் படத்தின் பாடல்களை ஃபெப்சி தலைவர் விசி குகநாதன் வெளியிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X