சுவாதியுடன் ஜோடி சேரும் சசிகுமார்!
சசிகுமாரை வைத்து சமுத்திரக்கனி இயக்கும் புதிய படமான போராளியில் ஹீரோயின் யார் என்பது தொடர்ந்து குழப்பமாகவே இருந்தது. அஞ்சலி நடிக்கிறார், த்ரிஷா நடிக்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டு வந்தது.
இப்போது அதில் ஒரு தெளிவு பிறந்துள்ளது. சசிகுமாரால் சுப்ரமணியபுரம் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சுவாதிதான் இந்த போராளியில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இன்னொரு ஜோடியாக வசுந்தரா நடிக்கிறாராம்.
முதல் இந்தப் படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அஞ்சலிக்கும், இயக்குநர் சமுத்திரக்கனிக்கும் ஏக பிரச்சினைகளாம். அரசியல் தலைவரை விட்டு சமுத்திரக்கனியை மிரட்டும் அளவுக்குப் போய்விட்டாராம் அஞ்சலி.
இப்படிப்பட்ட ஒரு ஹீரோயினை வைத்துக் கொண்டு எப்படி படத்தை எடுத்து முடிப்பது என்பதால், மாற்றிவிட்டார்களாம்.
இன்னும் ஒரு ஹீரோயினும் படத்தில் உண்டு. அது யார் என்று தேடிக் கொண்டிருக்கிறார்களாம்!


Click it and Unblock the Notifications











