நாசர் வேலைக்காரர் ரகளை!

இந்தப் பரபரப்புச் சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:
நடிகர் நாசர் வீட்டில் சமையல்காரராக இருந்தவர் பாலா என்ற இளைஞர். பல ஆண்டுகளாக நாசரின் சமையல்காரராக இருந்து வந்தார்.
அவரது மோசமான நடவடிக்கைகளால் அதிர்ச்சியடைந்த நாசர், திடீரென வேலையை விட்டு அவரை நீக்கிவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலா நேற்று முன்தினம் நள்ளிரவு குடித்துவிட்டு வந்து வளசரவாக்கத்தில் உள்ள நாசர் வீட்டுமுன் ரகளை செய்தார். ஆத்திரம் மிகுதியில் கற்களை எடுத்து நாசர் வீட்டு மீது வீசினார்.
இதில் அவரது பாத்ரூம் மற்றும் சமையல் அறைகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. அடுத்த நாள் இச்சம்பவத்தை போலீசாரிடம் வாய் மொழியாக புகார் கூறி பாலா மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார் நாசர்.
ஆனால் எழுத்துப் பூர்வமாக அவர் புகார் தர மறுத்துவிட்டதால், பாலா மீது நடவடிக்கை எடுக்க முடியாது என மறுத்துவிட்டனர் போலீசார்.


Click it and Unblock the Notifications











