3 இடியட்ஸ்: படத்தை தமிழில் ரீமேக் செய்யும் ஷங்கர்!

ரஜினி-ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவான எந்திரன் படத்தை வெளியிடுவதில் பிஸியாக உள்ள ஷங்கர், எந்திரன் ரிலீசுக்குப் பின் 3 இடியட்ஸ் தயாரிப்பில் இறங்குவார் என்று தெரிகிறது.
விது வினோத் சோப்ரா தயாரிக்க ராஜ்குமார் ஹிராணி இயக்க ஆமீர்கான், கரீனா கபூர், மாதவன், பொமன் இராணி உள்ளிட்டோர் நடித்த இந்த '3 இடியட்ஸ்' காமெடிப் படம் ரூ. 300 கோடி வசூலை வாரிக் குவித்தது குறிப்பிடத்தக்கது.
3 பொறியியல் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை மையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் அமீர் கான், கரீனாவின் பெரிய சம்பளங்கள் தவிர, பெரிய செலவு ஏதும் இல்லாமல் பெங்களூர், மும்பை, ஷிம்லா, லடாக் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழில் இதை யார் இயக்கப் போகிறவர் குறித்தும் நடிகர், நடிகைகள் குறித்தும் எந்திரன் ரிலீசுக்குப் பி்ன் முடிவு செய்வாராம் ஷங்கர்.
இவரது தயாரிப்பில் உருவான பல லோ-பட்ஜெட் படங்கள் பெரும் வெற்றியைக் குவித்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சமீபகாலமாக இவரது எஸ் பி்க்சர்ஸ் தயாரிப்பில் உருவான படங்கள் வசூலில் ஏமாற்றமே தந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











