ஷெர்லின் சோப்ரா நூதனப் போராட்டம்!

சர்க்கஸ்களில் மிருகங்களை சித்திரவதை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ஷெர்லின் சோப்ரா, தன்னை சங்கிலியால் பிணைத்துக் கொண்டு நூதனப் போராட்டத்தை நடத்தினார்.
சவுக்குகளும் சங்கிலிகளும் படுக்கை அறைக்கு உரித்தானவை, சர்க்கஸ் கூடாரங்களில் அல்ல என்ற தலைப்பி்ல், ஷெர்லின் தன்னைத் தானே சங்கிலியில் பிணைத்துக் கொண்டு போஸ் கொடுத்த புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்கள் கொல்கத்தா நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஷெர்லின் சோப்ரா கூறுகையில், நான் சங்கிலியால் என்னைப் பிணைத்துக் கொண்டால் அது செய்தியாகி விடுகிறது. அதேசமயம், சர்க்கஸ் கூடாரங்களில் விலங்குகளை சங்கிலியால் பிணைத்து வைத்திருந்தால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை.
ஒரு விலங்கை சங்கிலியால் கட்டி வைத்திருப்பதை வேடிக்கை பார்க்கும் மனோபாவம் கொடூர மனம் கொண்டவர்களால் மட்டுமே சாத்தியமாகும்.
சர்க்கஸ் நடத்துபவர்கள் விலங்குகளை முரட்டுத்தனமாக அடிக்கிறார்கள், அந்த விலங்குகளை கொடூரமான முறையில் சங்கிலிகளால் கட்டிப்ப போடுகிறார்கள். சொன்னதை சரிவர செய்யாவிட்டால் அந்த விலங்குகளை சித்திரவதை செய்கிறார்கள். சாப்பாடு சரியாக தருவதில்லை என்றார் சோப்ரா.


Click it and Unblock the Notifications











