சபரிமலை பக்தர்கள் மத்தியில் டிரம்ஸ் வாசித்த சிவமணி!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தார்கள். ஒரு நாள் முழுக்க காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரபல டிரம்ஸ் கலைஞர் சிவமணி இரு தினங்களுக்கு முன் சபரிமலை கோயிலுக்கு சென்றார். காலை 4 மணிக்கு இருமுடி கட்டுடன் சென்ற சிவமணி ஐயப்பனை தரிசனம் செய்தார்.
உஷ பூஜையின் போது மங்கல வாத்தியங்கள் இசைக்கப்படுவது வழக்கம். வழக்கமான இசைக் குழுவினர் மங்கல இசை வாசிக்கத் தொடங்கியபோது, சிவமணியும்தான் கொண்டு வந்த சிறிய டிரம்ஸ் மற்றும் அங்கு கிடைத்த பாத்திரங்களின் உதவியுடன் டிரம்ஸ் வாசிக்க தொடங்கினார்.
தொடர்ந்து கீழே இறங்கி வந்த அவர் பதினெட்டாம் படி அருகில் நின்று கொண்டு சிறிது நேரம் டிரம்ஸ் வாசித்தார். இதை அங்கு கூடி நின்ற ஏராளமான பக்தர்கள் உற்சாகமாகக் கண்டு ரசித்தனர்.
Comments


Click it and Unblock the Notifications