டிவிடி விற்பனையிலும் சுப்பிரமணியபுரம் சாதனை

சசிகுமார் தயாரித்து இயக்கி நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் சுப்பிரமணியபுரம். நல்ல வசூலுடன் வெற்றிகரமாக ஓடிய இந்தப் படத்தின் டிவிடியை உடனடியாக வெளியிட்டுள்ளார் சசிகுமார்.
மோசர் பேர் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த டிவிடி வெளியான முதல்நாளே 55,000 வரை விற்றுத் தீர்ந்துள்ளது.
சிடிக்களின் விலை ரூ.40 ஆகவும், டிவிடியின் விலை ரூ.50 ஆகவும் இருப்பதால் ரசிகர்கள் வெகு ஆர்வத்துடன் இவற்றை வாங்குவதாகக் குறிப்பிட்டார் இயக்குநர் சசிகுமார்.
இதுகுறித்து மோசர் பேர் நிறுவனத்தின் ஜி தனஞ்செயன் கூறியதாவது: இந்த டிவிடிக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பு ஒரு புதிய ரெகார்ட் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏற்கெனவே 50000 டிவிடிகளுக்கு மேல் விற்பனையாகிவிட்டன. விரைவில் 1 லட்சம் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கிறேன், என்றார்.
ஒரே நாளில் ஒரு தமிழ்ப் படத்தின் டிவிடி இந்த அளவு விற்பனையாகியிருப்பது இதுவே முதல் முறை.


Click it and Unblock the Notifications











