மீண்டும் இணையும் 'அயன்' டீம்!

தமிழ்த் திரையுலகின் பிரபல பட நிறுவனங்களில் ஒன்று ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ். திருட்டுப் பயலே, மாசிலாமணி, சந்தோஷ் சுப்ரமணியம், இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம், சமீபத்தில் வெளியான மதராசதச பட்டணம் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது இந்த நிறுவனம்.
இந் நிலையில் ஏஜிஎஸ் தயாரிக்கும் புதிய படத்திற்காக அயன் பட நாயகன் சூர்யாவும், இயக்குநர் கே.வி.ஆனந்தும் ஒன்றாக கை கோர்க்கிறார்கள். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. படத்தின் பிற கலைஞர்கள், நாயகி, தொழில்நுட்பக் கலைஞர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஷூட்டிங் தொடங்குகிறதாம்.
வழக்கம் போல இப்படத்தையும் மிகப் பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறார் கல்பாத்தி அகோரம்.
More from Filmibeat
ayan team அயன் படக் குழு கல்பாத்தி அகோரம் கேவிஆனந்த் சூர்யா தமிழ் சினிமா kalpathi agoram kvanand surya tamil cinema


Click it and Unblock the Notifications











