ப்ரீத்தி பண்டாரியின் ஊலலலா

இயக்குநர் ஜோதி கிருஷ்ணா ஹீரோவாகியுள்ளார். இவர் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினத்தின் மகன் ஆவார். இவருடைய தம்பி ரவி கிருஷ்ணா ஹிரோவாக தோல்வி அடைந்துள்ள நிலையில் அண்ணனே ஹீரோ அவதாரம் எடுத்துக் களம் இறங்கியுள்ளார்.
அவர் ஹீரோவாக நடிக்கும் படம் ஊலலலா. இப்படத்தில் ப்ரீத்தி பண்டாரி ஹீரோயினாகிறார். கவர்ச்சிகரமான இளமை கொப்பளிக்கும் படமாக இதை உருவாக்கியுள்ளார் ஜோதி கிருஷ்ணா.
ஊலலலா என்பதற்கு ஊர்வசி, லதா, லலிதா, லாவண்யா என்று பொருளாம். ஹீரோயினாக நடிக்கும் ப்ரீத்தி பண்டாரி படம் முழுக்க இளமையை ஊஞ்சலாட விட்டுள்ளார். ஹீரோ ஜோதி கிருஷ்ணாவும், ப்ரீத்தியும் இடம் பெறும் அட்டகாசமான முத்தக் காட்சியும் படத்தில் இடம் பெறுகிறதாம்.
இந்த முத்தக் காட்சி குறித்து கடைசி வரை ப்ரீத்திக்கு தெரிவிக்காமலேயே வைத்திருந்தாராம் ஜோதி கிருஷ்ணா. கடைசி நேரத்தில்தான் அதைக் கூறியுள்ளார். ஒரு பாடல் காட்சியின்போது இந்த முத்தம் வருகிறதாம்.
ப்ளேபாய் ரோலில் நடித்துள்ளார் ஜோதி கிருஷ்ணா. பேக்கரி கடையில் வேலை பார்க்கும் பெண்ணாக வருகிறார் ப்ரீத்தி. படத்தின் இயக்கத்தையும் ஜோதியே பார்க்க, இசையமைத்துள்ளனர் சேகர் சந்திரா மற்றும் வி.குமார்.
ஊலலலா படத்தின் ஆடியோ நாளை ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கான அழைப்பிதழை வித்தியாசமான முறையில் வடிவமைத்துள்ளனர். டிசம்பரில் படம் திரைக்கு வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











