கோலிவுட் சினி வெடிகள்!

இங்கே காமெடியனாக நடித்துக் கொண்டிருக்கும் ரமேஷ்கண்ணா, மலேஷிய படம் ஒன்றில் முழு நீள கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் பெயர் கலர்புல் மலேஷியா.
சாதுமிரண்டா படத்தின் நாயகி காவ்யா மாதவன் ஒரு மலையாளப் படத்தில் பாடலாசிரியராக அவதாரமெடுத்துள்ளார். படத்தின் பெயர் ஒன்வே டிக்கெட். இதில் ஒரு பாடலை அவரே பாடியிருக்கிறாராம்.
பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தில் முவு நீள நகைச்சுவைப் பாத்திரத்தில் வருகிறார் இயக்குநர் சிங்கம் புலி. அஜீத் நடித்த ரெட், சூர்யாவின் மாயாவி படங்களை இயக்கிவர்தான் இந்த சிங்கம்புலி என்ற ஜெகன் என்பது தெரியும்தானே!
ஒரு தமிழ் ஆசிரியரை தனியாக நியமித்து தமிழ் கற்று வருகிறார் கீர்த்தி சாவ்லா. இதேபோல, பரதம், யோகா ஆகியவற்றுக்கும் தனித்தனி பயிற்சியாளரை நியமித்துள்ளாராம்.
அஜீத் நடிக்கும் சிவாஜி பிலிம்ஸ் படத்தை இயக்கப் போகிறவர், சென்னை-28 பட புகழ் வெங்கட் பிரபு.
அமீரின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் கண்ணபிரானில் கதாநாயகன் ஜெயம் ரவி என்பது தெரிந்ததே. படத்தை தயாரிக்கப் போகிறவர் சிவஸ்ரீ சீனிவாசன் அல்லது அம்மா கிரியேஷன்ஸ் சிவாவாக இருக்கும் என அமீரே கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











