கமல்ஹாசன் தலைமையில் உதயநிதி ஸ்டாலினின் நான்கு பட வெற்றி விழா

By Chakra

தனது தயாரிப்பில் வெளியான நான்கு படங்களின் வெற்றி விழாவை கமல்ஹாசன் தலைமையில் நடத்தத் திட்டமிட்டுள்ளாராம் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.

அலட்டிக் கொள்ளாமல் தமிழ்த் திரையுலகில் சாதனை படைத்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். ஒரு படத்தின் வெற்றி விழாவைக் கூட அவர் ஆடம்பரமாகவோ, அமர்க்களப்படுத்தியோ இதுவரை செய்ததில்லை.

குறிப்பாக சமீபத்தில் அடுத்தடுத்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற விண்ணைத் தாண்டி வருவாயா, மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா ஆகிய படங்கள் குறித்து அவர் பெரிய அளவில் இதுவரை அலட்டிக் கொள்ளவே இல்லை. ஆனால் இப்போது மொத்தமாக நான்கு படத்துக்கும் சேர்த்து பிரமாண்ட பாராட்டு விழாவுக்குத் திட்டமிட்டுள்ளாராம் உதயநிதி.

மேலும், இந்த வெற்றி விழாவுக்கு தனது தயாரிப்பில் வெளியாகியுள்ள மன்மதன் அம்பு பட நாயகன் கமல்ஹாசனை சிறப்பு விருந்தினராக அழைக்கவும் திட்டமிட்டு வருகிறாராம் உதயநிதி.

நான்கு படங்களின் வெற்றி விழாவான இதை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ள உதயநிதி அதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாகியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வெற்றி விழாவின்போது ராஜேஷ் இயக்கத்தில் தான் கதாநாயகனாக நடிக்கவுள்ள புதிய படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட உத்தேசித்துள்ளாராம் உதயநிதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X