வடிவேலுவுக்கு என்ன பிரச்சினை?

By Staff

Vadivelu with Babylona
இம்சை அரசன் வடிவேலுவுக்கு பத்திரிக்கையாளர்களைக் கண்டாலே பெரும் இம்சையாகி விடுகிறதாம். இதனால் எந்தப் பத்திரிக்கையாளரையும் தன்னை அண்ட விட வேண்டாம் என உதவியாளர்களிடம் கண்டிஷனாக சொல்லியுள்ளாராம்.

தான் 2வது முறை ஹீரோவாக நடித்த இந்திரலோகத்தில் நா. அழகப்பன், கந்தரகோலமாக போய் விட்டதற்கு முக்கிய காரணமாக பத்திரிக்கைகள் எழுதிய விமர்சனங்கள்தான் காரணம் என நினைக்கிறாராம் வடிவேலு.

பத்திரிகைகள் குண்டக்க மண்டக்க விமர்சனம் எழுதப் போக, படம் குறித்து நெகட்டிவான அலை மக்களிடையே பரவி விட்டதாக அவர் நினைக்கிறாராம். இதனால், எந்தப் பத்திரிக்கையாளரையும் பார்ப்பதை அவர் தவிர்க்கிறாராம். பேட்டி, கீட்டி என்று யாராவது வந்தால் டைமே கொடுக்கக் கூடாது என்றும் தனது மேனேஜர் உள்ளிட்டவர்களிடம் சொல்லி வைத்துள்ளாராம்.

இந்திரலோகத்தில் ... ஷூட்டிங்கில் இருந்தபோதே, இந்த காட்டமான மன நிலைக்கு வடிவேலு வந்து விட்டதாக கூறப்படுகிறது. ஒரு சினிமா பத்திரிக்கையாளர் (பி.ஆர்.ஓவாகவும் இருக்கிறார்) ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துள்ளார். வடிவேலுவை அணுகி பேட்டி வேண்டும் என்று கேட்டுள்ளார். வடிவேலுவும் வரவேற்று அவரை அமர வைத்தாராம்.

அதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. வந்தவரை மேக்கப் ரூமுக்கு வெளியே உட்கார வைத்து விட்டு, செத்த இருங்கண்ணே, வந்துர்றேன் என்று உள்ளே போன வடிவேலு, தயாரிப்பாளர் செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணனிடம் போய், உடனே அந்த ஆளை வெளியே அனுப்புங்க. இத நான் சொன்னதா இல்லாம, நீங்களா சொன்ன மாதிரி இருக்கட்டும் என்று கூறினாராம். இதை ஒரு சாம்பிள் என்கிறார்கள்.

இதுதவிர தன்னுடன் நடிக்கும் சக நடிகர், நடிகையரிடமும் கடுகடு என பழகி வருகிறாராம் வடிவேலு. சில நாட்களுக்கு முன்பு தான் நடிக்கும் அந்தோணி யார் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க விரும்பிய நடிகர் ஷாம், நேரடியாக வடிவேலு படப்பிடிப்பில் இருந்த இடத்திற்குப் போயுள்ளார்.

நட்பான முறையில் வடிவேலுவை சந்தித்து நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் படா கோபமான வார்த்தைகளால் பேசிய வடிவேலு, ஷாமைப் பிடித்து தள்ளி விட்டாராம்.

அதிர்ச்சி அடைந்த ஷாம், இதுகுறித்து நடிகர் சங்கத்தில் வாய் மொழிப் புகார் கொடுத்துள்ளாராம்.

இதெல்லாம் என்னண்ணே, உண்மையா இது என்று விசாரிக்க வடிவேலுவைத் தொடர்பு கொண்டபோது, அவர் கிடைக்கவில்லை. அவரது உதவியாளர்தான் கிடைத்தார். நடந்தது என்ன என்று அவரிடம் கேட்டபோது, அப்படியெல்லாம் இல்லைண்ணே, அடிக்கவெல்லாம் செய்யவில்லை. அப்போது சார் நல்ல மூடில் இல்லை. அதுதான் காரணம். மற்றபடி நீங்கள் சொல்வது போல ஒன்றும் நடக்கவில்லை என்றார்.

'கைப்புள்ளை'க்கு என்னாச்சு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X