வேலு பிரபாகரனின் 'காதல் கதை' இது!

இந்தப் படத்தில் பல நிர்வாணக் காட்சிகளும், குழந்தைப் பிறப்பை சித்தரிக்கும் காட்சிகளையும் தத்ரூபமாகக் காட்டியுள்ளாராம் வேலு பிரபாகரன் (இதில் என்ன புரட்சியோ!)
இந்தப் படம் உருவானதன் பின்னணி குறித்து சமீபத்தில் வேலு பிரபாகரன் ஒரு 'பப்ளிசிட்டி' பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:
காதல் ஒருமுறைதான் மலரும் என்று சின்ன வயதில் நான் நம்பினேன். அதை பாட்டாக எழுதிய கவிஞர் கண்ணதாசனுக்கே காதல் பலமுறை மலர்ந்திருக்கிறது என்று தாமதமாகத்தான் தெரிந்துகொண்டேன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் அனுபவங்கள்தான், 'காதல் கதை' படமாக மலர்ந்துள்ளது.
நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, எனக்குள் முதல்முதலாக காதல் வந்தது. என் காதலியின் பெயர், அஞ்சலி. என்னுடன் படித்தவள். உலகிலேயே அவள்தான் அழகி என்று நம்பி உருகினேன்.
மூன்று வருடங்கள் கழித்து என் நண்பனை சந்தித்தபோது, 'அஞ்சலிக்கு கல்யாணம் முடிந்து விட்டது' என்றான்.
முதல் காதல்தான் எப்போதும் சிறந்த காதல் என்ற நினைப்பில், அப்படியே வாழ்ந்துவிட்டேன்.
7 வருடங்கள் கழித்து, ஒரு நடிகை மீது மீண்டும் காதல் வயப்பட்டேன். அப்போது அவள் வேறு ஒருவருடன் திருமணமாகமலேயே வாழ்ந்து கொண்டிருந்தாள். எனக்கு அது ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை.
அவள்தான் வேண்டும் என அவள் கால்களை பிடித்துக் கதறினேன். பிறகு அவளை திருமணம் செய்துகொண்டு அவளுடன் உறவு கொண்டபின், அவள் மீது நான் கொண்டது காதல் அல்ல, வெறும் உடல் கவர்ச்சி என்பதைப் புரிந்து விலகினேன்.
எனக்குப் பிறந்த அந்த ஞானத்தை உலகுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இந்த உடல் கவர்ச்சி பற்றி வெளி உலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்... உடல் கவர்ச்சியை சாதாரணமாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதன் வெளிப்பாடுதான், 'காதல் அரங்கம்.' இனி அது காதல் கதை என்ற பெயரில் வரவிருக்கிறது..." என்றார் வேலு பிரபாகரன்.
இந்தப் படத்தில் நாயகியாக ஷெர்லி தாஸ் நடித்துள்ளார். படத்தில் சில காட்சிகளில் நிர்வாணமாக நடித்துள்ளாராம் இவர்.


Click it and Unblock the Notifications











