வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார்

By Staff

Stefania Fernandez
பஹாமஸ்: மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெனிசூலா அழகி ஸ்டெபானியா பெர்னாண்டஸ் வென்றார். கடந்த ஆண்டும் வெனிசூலாவுக்கே மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அழகி ஏக்தா செளத்ரி, கடைசி 15 பேரில் கூட இடம் பெற முடியாமல் வெளியேறி ஏமாற்றத்தை அளித்தார்.

பஹாமஸ் தீவுகளில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிச் சுற்றுக்கு மிஸ் பியூர்டோரிகா, மிஸ் ஐஸ்லாந்து, மிஸ் அல்பேனியா, மிஸ் செக், மிஸ் பெல்ஜியம், மிஸ் ஸ்வீடன், மிஸ் கொசாவோ, மிஸ் ஆஸ்திரேலியா, மிஸ் பிரான்ஸ், மிஸ் சுவிட்சர்லாந்து, மிஸ் அமெரிக்கா, மிஸ் வெனிசூலா, மிஸ் தென் ஆப்பிரிக்கா, மிஸ் டொமினிக்கன், மிஸ் குரோஷியா ஆகிய 15 அழகிகள் தகுதி பெற்றனர்.

இன்று காலை 15 பேரும் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.

இதில், வெனிசூலா அழகி ஸ்டெபானியா பெர்னாண்டஸ் பட்டம் வென்றார். கடந்த ஆண்டும் வெனிசூலாவைச் சேர்ந்த அழகியே பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டெபானியாவுக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற வெனிசூலாவின் டயானா மென்டெஸ் கிரீடம் சூட்டினார்.

பட்டம் வெல்வதில் வெனிசூலா புதிய சாதனை

முதல் ரன்னர் ஆக மிஸ் ஆஸ்திரேலியா ராச்சல் பின்ச், மிஸ் பியூர்டாரிகோ மாய்ரா மாடோஸ் பெரேஸ், 2வது ரன்னர் ஆக மிஸ் கொசாவோ கோனா டிராகுஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அழகிப் பட்டங்களை வெல்வதில் வெனிசூலா புதிய சாதனையும் படைத்துள்ளது. இதுவரை வெனிசூலா ஐந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களை வென்றுள்ளது. இதுதவிர ஐந்து மிஸ் வேர்ல்ட், நான்கு மிஸ் இன்டர்நேஷனல் பட்டங்களையும் அது வென்றுள்ளது. வேறு எந்த நாட்டு அழகியும் இவ்வளவு அதிக பட்டங்களை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மிஸ் யுனிவர்ஸ் ஸ்டெபானியா, ரஷ்ய, உக்ரைனிய, காலிசிய, போலந்து நாடுகளின் பின்னணியைக் கொண்டவர். அவரது தாயார் நடியா கிருபிஜ் ஹோலோஜாத் மற்றும் தந்தை கார்லோஸ் பெர்னாண்டஸ் ஆவர். 18 வயதாகும் ஸ்டெபானியா கன்னி ராசியைச் சேர்ந்தவர். நீச்சல், டென்னிஸ் இவரது பொழுதுபோக்குகள் ஆகும்.

மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் கடைசி ஐந்து இடங்களுக்கு ஸ்டெபானியா தவிர மிஸ் டொமினிக்கன், மிஸ் ஆஸ்திரேலியா, மிஸ் பியூர்டாரிகோ, மிஸ் கொசாவோ ஆகியோர் முன்னேறினர்.

மிஸ் கான்ஜெனிலிட்டியாக மிஸ் சீனா வாங் ஜிங்யோவா, மிஸ் போட்டோஜெனிக் ஆக மிஸ் தாய்லாந்து சுதிமா துரோங்தேஜ் ஆகியோர் தேர்வாகினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X