சில்க் கதை: வினுசக்கரவர்த்தி - ஏக்தா கபூர் மோதல்!

விஷயம் கேள்விப்பட்ட அந்தப் படத்தின் (தி டர்ட்டி பிக்சர்) தயாரிப்பாளர் ஏக்தா கபூர், வினுச் சக்கரவர்த்தியால் என்னை எதுவும் செய்ய முடியாது. காரணம் அவர் சில்க் ஸ்மிதாவின் ரத்த சொந்தம் அல்ல. எனவே திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்வேன், என்று பதிலுக்கு சவால் விட்டுள்ளார்.
இதில் இன்னும் கொதித்துப் போயுள்ளார் வினுச்சக்கரவர்த்தி.
விஷயத்தைக் கேள்விப்பட்டதும், "அப்படியா சொன்னாங்க... இதோ இப்பவே மும்பை போறேன்யா. எனக்கும் அங்க ஆளிருக்காங்க. பெரிய வக்கீலா புடிச்சி கேஸ் போடப் போறேன். எப்படி ரிலீஸ் பண்றாங்கன்னு பாக்கிறேன்," என்றார் கடுப்புடன்.
அட, படத்தை விட இந்த லடாய்தான் 'ரியல் டர்ட்டி பிக்சரா' இருக்கும் போலிருக்கே!
Comments


Click it and Unblock the Notifications