செளந்தர்யாவுடன் இணையும் வார்னர்

வார்னர் பிரதர்ஸ் பாலிவுட் மூலமாக தற்போது கோலிவுட்டுக்கு வந்துள்ளது. பாலிவுட்டில் வார்னர் எடுத்த முதல் படம் சாந்தினி செளக் டூ சைனா. இப்படத்தில் அக்சய் குமாரும், தீபிகா படுகோனும் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது கோலிவுட் வந்துள்ளது வார்னர்.
ஆக்கர் ஸ்டுடியோவுடன் 3 ஆண்டு ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது வார்னர்.
இந்த ஒப்பந்தத்தின்படி ஆக்கர் ஸ்டுடியோ தயாரிப்பு மற்றும் விநியோகத்தை கவனிக்கும். அப்படங்களை வார்னர் பிரதர்ஸ் வெளியிடும்.
இந்த கூட்டணியின் முதல் தயாரிப்பாக உருவாகவுள்ளது வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் தயாராகவுள்ள கோவா. அடுத்த படத்தை விஜய்யை வைத்து தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார் செளந்தர்யா.
அப்ப தனுஷுக்கு படம் இல்லையா?
Comments
ஆக்கர் ஒப்பந்தம் சினிமா செளந்தர்யா ரஜினிகாந்த் தமிழ் வார்னர் பிரதர்ஸ் cinema contract ocher soundarya rajinikanth warner brothers


Click it and Unblock the Notifications