twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குஷ்பு தம்பி ஹீரோவாகிறார்!

    By Staff
    |

    Khushboo
    'நேற்று போல் இன்று இல்லை'- இது படத்தின் பெயர். உங்கள் ஊகம் சரிதான். ரஜினி நடித்த தம்பிக்கு எந்த ஊரு படத்தின் பாடல் வரிதான் இது.

    ஆனால் இந்தத் தலைப்பை ஒரு மென்மையான காதல் படத்துக்குச் சூட்டவில்லை, திகில் நிறைந்த மாயாஜாலப் படத்துக்கு வைத்திருக்கிறார்கள்.

    கதாநாயகன் யார் தெரியுமா... குஷ்புவின் தம்பியான அப்துல்லா!

    இந்தப் படத்தின் விசேஷம், முழுக்க முழுக்க ஃபேண்டஸி அடிப்படையில், ஹாரி பாட்டர் மாதிரி உருவாகும் படம் இது என்பதுதான். தமிழில் ஃபேண்டஸி கதைகள் வருவதே அபூர்வமாக உள்ள நிலையில், குடும்பத்தினரைக் கவரும் விதத்தில் இப்படத்தை உருவாக்கி வருகிறார்களாம்.

    தந்திரக் காட்சிகளுக்கு ஏராளமாய் செலவு செய்து வருகிறார்கள்.

    ஸ்கைலாப் எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் நாயகி ப்ரியா சகாயதேவ். புதுமுகம்தான், என்றாலும் அனுபவசாலிகளுக்கு இணையாக நடித்திருக்கிறாராம் இந்தப் படத்தில்.

    இந்தப் படத்தில் இன்னொரு விசேஷம் முன்னாள் கவர்ச்சி நடிகை வினிதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பதுதான். கதாநாயகிக்கு இணையான ரோலில் நடிக்கிறாராம்.

    ரஜனி ராயன் இசையமைப்பில் பாடல்கள் நன்றாக வந்திருப்பதாகச் சொல்கிறார் படத்தின் புதுமுக இயக்குநர் எம்.கவுசர்.

    இந்தப் படம் முழுக்க முழுக்க வித்தியாசமான படம். அதே நேரம் இளைஞர்களைக் கவரும் பல அம்சங்களும் இந்தப் படத்தில் உள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப் பட்டுள்ளது, என்கிறார் கவுசர்.

    குத்துப்பாட்டு, காமெடி எல்லாமும் உண்டாம். இல்லாட்டி எப்படி தமிழ்ப் படமாகும்!!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X