ஏகன் இந்தி ரீமேக் அல்ல!-ராஜு சுந்தரம்

By Staff

Ajith with Raju Sundaram
ஷாரூக்கான் நடித்த இந்திப் படம் 'மெய்ன் ஹூன் நா'வின் ரீமேக் அல்ல ஏகன் என்று கூறியுள்ளார் அப்படத்தின் இயக்குநர் ராஜுசுந்தரம்.

அய்ங்கரன் தயாரிப்பில் அஜீத் - நயன்தாரா நடித்து தீபாவளி வெளியீடாக வரும் படம் ஏகன். பில்லாவுக்குப் பின் வரும் படம் என்பதால் அஜீத் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது இப்படம்.

உலகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் ஏகன், சென்னையில் மட்டும் 17 திரையரங்குகளில் ரிலீசாகிறது. அஜீத் படம் சென்னையில் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுபவே முதல்முறை.

இந்நிலையில் இந்தப் படம் குறித்து இயக்குனர் ராஜுசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:

ஏகன் ஆக்ஷன் - காமெடி கலந்த சுவாரஸ்யமான படம். மெய்ன் ஹூன் நாவின் தழுவல் இது என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதில் உண்மையில்லை. பேக் டூ ஸ்கூல் என்ற ஆங்கிலப் படம் மற்றும் ஒரு கொரியன் படத்தின் கதையையொட்டி உருவாக்கப்பட்டுள்ள படம் இது.

இதுவரை தமிழ் படமே வெளியாகாத நாடுகளில் கூட ஏகனை வெளியிடுகிறது அய்ங்கரன் நிறுவனம்.

400 பிரிண்ட்டுகள் போட்டுள்ளோம். 500 தியேட்டர்களை புக் செய்துள்ளோம்.

அஜீத்துடன் பணியாற்றுவது இனிய அனுபவம். ஏற்கெனவே அஜீத்துடன் பல படங்களில் நடன இயக்குனராக இருந்ததால் அவருக்கும் எனக்கும் ஒரே மாதிரி எண்ண ஓட்டம் இருந்தது.

அடுத்த படம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. நேரம் கிடைக்கும்போது நடன இயக்கமும் செய்வேன் என்றார் ராஜூ சுந்தரம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X