ஆஸ்கர் விருது: 'நோ கன்ட்ரி பார் ஓல்ட் மென்' சிறந்த படம்

டேனியல் டே லூயிஸ் சிறந்த நடிகராகவும், பிரான்ஸைச் சேர்ந்த மரியான் கோடிலார்ட் சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
அகாடமி விருதுகள் என அழைக்கப்படும் 80வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சலஸில் கோலாகலமாக நடந்தது.
உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த விழாவில் நோ கன்ட்ரி பார் ஓல்ட் மென் என்ற படத்திற்கு சிறந்த படத்துக்கான விருது கிடைத்தது.
தேர் வில் பி பிளட் என்ற படத்தில் நடித்த டேனியல் டே லூயிஸ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார்.
பிரெஞ்சுப் படமான லா வி என் ரோஸ் படத்தில் நடித்த மரியான் கோடிலார்ட் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார்.
பிற விருதுகள் விவரம் வருமாறு:
வெளிநாட்டுப் படம் - தி கவுன்டர்பீட்டர்ஸ் (ஆஸ்திரியா)
சிறந்த படம் - நோ கன்ட்ரி பார் மென்.
சிறந்த துணை நடிகர் - ஜேவியர் பார்டம் (நோ கன்ட்ரி பார் மென்)
சிறந்த துணை நடிகை - டில்டா ஸ்வின்டன் (மைக்கேல் கிளைட்டன்)
திரைக்கதை (அடாப்டட்) - நோ கன்ட்ரி பார் மென்
திரைக்கதை (ஒரிஜினல்) - ஜூனோ
இயக்கம் - ஜோயல் கோயன், ஈதன் கோயன் (நோ கன்ட்ரி பார் மென்)
விஷூவல் எபக்ட்ஸ் - தி கோல்டன் கம்பாஸ்
அனிமேட்டட் பொழுதுபோக்கு படம் - ரேடோடூயி
குறும்படம் (லைவ் ஆக்சன்) - தி மொசார்ட் ஆப் பிக் பாக்கெட்ஸ்
குறும்படம் (அனிமேஷன்) - பீட்டர் அன்ட் தி உல்ப்
உடை வடிவமைப்பு - எலிசபெத் - தி கோல்டன் ஏஜ்
மேக்கப் - லா வி என் ரோஸ்
டாக்குமென்டரி குறும்படம் - ப்ரீஹெல்ட்
டாக்குமென்டரி பொழுதுபோக்குப் படம் - டாக்சி டு தி டார்க் சைட்
கலை இயக்கம் - டேன்டே, பிரான்ஸெஸ்கா லோ ஷ்யாவோ
இசை - அடோன்மென்ட்
இசை (பாடல்) - ஒன்ஸ்
ஒலிக் கலப்பு - தி பார்ன் அல்டிமேட்டம்
ஒலி எடிட்டிங் - தி பார்ன் அல்டிமேட்டம்
பட எடிட்டிங் - தி பார்ன் அல்டிமேட்டம்
ஒளிப்பதிவு - தேர் வில் பி பிளட்


Click it and Unblock the Notifications











