twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் டிவியின் சம்மர் ஸ்பெஷல்

    By Staff
    |

    Vijay TV summer special
    கோடை விடுமுறை வந்து விட்டது. கோடையின் வெம்மையைக் குறைக்க விஜய் டிவியுடன் குளு குளு படங்களுடன் ரெடியாகி விட்டது.

    கோடை விடுமுறையையொட்டி விஜய் டிவியில் தினசரி பிற்பகல் விதம் விதமான திரைப்படங்கள் ஒளிபரப்பப்படவுள்ளன.

    ஏப்ரல் 21ம் தேதி முதல் 6 வாரத்திற்கு, திங்கள் முதல் வியாழக்கிழமை வரை தினசரி பிற்பகல் 2 மணிக்கு இந்தத் திரைப்படங்கள் ஒளிபரப்பாகும். குழந்தைகளுக்கான திரைப்படங்கள் இவை என்பதுதான் இதில் விசேஷம்.

    கிருஷ்ணா, பால் கணேஷ், மை பிரண்ட் கணேஷா, பிருத்விராஜ் செளகான், போன்ற அனிமேஷன் படங்களும், பிளேன் டெட், தே ஆர் அமாங் அஸ், டிரெமர்ஸ் உள்ளிட்ட திரில்லர் படங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக இவை திரையிடப்படுகின்றன.

    இதுதவிர ஹ்ரித்திக் ஹரோஷனின் கிருஷ், ஹோம் அலோன், லீக் ஆப் எக்ஸ்டார்டினரி ஜென்டில்மென், மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ், அனகோண்டா 3 உள்ளிட்டவையும் குட்டீஸ்களை குதூகலிக்க வைக்க வருகின்றன.

    இதுதவிர என்சினோ மேன், பிக் பேட் லையர் உள்ளிட்ட காமெடி வெடிகளும் கடிக்க காத்திருக்கின்றன.

    வார இறுதி நாட்களில் ஐஸ் ஏஜ், மடகாஸ்கர், பேபிஸ் டே அவுட் உள்ளிட்ட ஹாலிவுட் சூப்பர் ஹிட் படங்களைக் காண தவறாதீர்கள்.

    படங்கள் மட்டுமல்லாது குட்டீஸ்களுக்காக பரிசுப் போட்டியும் காத்திருக்கிறது. படம் பார்த்து வெல்லும் இந்தப் போட்டியின் கீழ், படத்தைப் பார்த்து அதில் கேட்கப்படும் கேள்விக்கு எஸ்.எம்.எஸ். மூலம் பதில் சொல்ல வேண்டும். சரியான பதிலைச் சொல்லுபவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் சைக்கிள், கிப்ட் வவுச்சர், மேஜிக் ஷோக்களுக்கான சிறப்பு டிக்கெட்கள் காத்திருக்கின்றன. இந்தப் பரிசுகள் தினசரி வழங்கப்படும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

    எனவே ஏப்ரல் 21ம் தேதி முதல், திங்கள்கிழமையிலிருந்து வியாழக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு விஜய் டிவியின் கோடை கால சிறப்பு திரைப்படங்களைக் காணத் தவறாதீர்கள் குட்டீஸ்களே.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X