சேரனின் 'ஸ்பாட் பைன்'!

ஷூட்டிங் ஸ்பாட்டில் செல்போனில் பேசக் கூடாது என்ற தயாரிப்பாளர் சங்கம் ஏற்கனவே ஒரு கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. ஆனால் இதனை பெரும்பாலான நடிகர்-நடிகைகள், கலைஞர்கள் பின்பற்றுவதேயில்லை.
ஆனால் இதைக் கடுமையாகக் கடைப் பிடித்தே தீருவது என்று முடிவு செய்த நடிகரும் இயக்குநருமான சேரன், உடனடியாக அதை செயலிலும் காட்டினார்.
தனது பொக்கிஷம் படத்தின் படப்பிடிப்பில் யாருமே செல்போனில் பேசக்கூடாது என கடுமையாக சட்டம் போட்டுவிட்டாராம். அதையும் மீறி யாராவது செல்போனில் பேசினால் ரூ.250 ஸ்பாட் பைன் வசூலிக்கப்படும் என அறிவித்து அதை செயலிலும் காட்டியிருக்கிறார்.
இப்படி வசூலித்த தொகை ரூ.10,000த்தை தாண்டி விட்டதாம்.
படப்பிடிப்பு முழுவதும் முடிந்த பின்னர் இந்த தொகை ஏதாவது ஒரு நல்ல காரியத்துக்கு பயன்படுத்தப்படும், என்று தெரிவித்துள்ளார் சேரன்.
அதேநேரம், ஆரம்பத்தில் அதிகமாகச் சேர்ந்த இந்த அபராதத் தொகை போகப்போக குறைந்துவிட்டதாம்.
அது சரி... பொது மேடைகளில் பேசும்போது உங்களுக்கும் இதே கட்டுப்பாட்டைப் பயன்படுத்தலாமா சேரன்?


Click it and Unblock the Notifications











