இந்தி கஜினிக்கு தடை நீங்கியது

இதனால் திட்டமிட்டபடி இன்று தமிழகத்தில் படம் ரிலீசானது.
கிறிஸ்துமஸ் அன்று வெளியாகவிருந்த இந்தப் படத்தின் காப்பிரைட் மற்றும் ரீமேக் உரிமம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தி கஜினிக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்கால தடை விதித்தது.
இதனால் இந்தப் படம் வியாழக்கிழமை வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் இடைக்கால தடையை விலக்கிக் கொண்டது.
மேலும் இந்த வழக்கு விசாரணைணை வரும் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Comments


Click it and Unblock the Notifications