சுட்டிச் சாத்தானாக வரும் குட்டிச் சாத்தான்!

சென்ற தலைமுறையை வென்ற இந்தப் படத்தை, நேற்றைய தொழில் நுட்பங்களையும், நாளைய தொழில் நுட்பங்களையும் சேர்த்து வெளிட்டுள்ளனர்.
இந்தப் புதிய பதிப்பில், தொழில்நுட்பங்கள் மட்டுமல்ல, திரையுலகில் தனி இடம் பிடித்த நடிகர்கள், குணச்சித்திர நடிகர் பிராகாஷ்ராஜ், நகைச்சுவை நடிகர் சந்தானம், ஊர்மிளா மற்றும் பலர் இடம் பெற்றுள்ளர். ஒரிஜினல் படத்தில் இடம்பெற்ற பழைய நடிகர்களும் இதில் இடம் பெறுமாறு செய்துள்ளனர்.
தமிழில் நேரடி 3டி தொழில்நுட்பத்தில், டிஜிட்டல் சவுண்ட், கம்பியூட்டர் இமேஜிங், இன் கவுஸ் ஆர் & டி, ஸ்டீரியோ இமேஜஸ் ஆகிய நவீன யுக்திகளைப் பயன்படுத்தி உருவான இந்த மை டியர் குட்டிச் சாத்தான் (சுட்டி சாத்தான்), சிறுவர்களையும், பெரியவர்களையும் ஒன்று சேர கவர்ந்து இழுக்கும் வகையில் வெளியாகியுள்ளது.
மை டியர் குட்டிச் சாத்தானில் (சுட்டி சாத்தான்) 40 வகையான மாயாஜாலக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது 100 நிமிடங்கள் ஒடக்கூடிய இப்படத்தில் 2 1/2 நிமிடத்திற்கு ஒரு மாயாஜாலக் காட்சி என்று ரசிகர்களை பரவசப்படுத்தும் வகையில் அமைந்துள்ளார்களாம்.
இந்தியாவின் முதல் டிஜிட்டல் 3டி என்ற பெருமையை பெற்றுள்ளது மை டியர் குட்டிச் சாத்தான் (சுட்டி சாத்தான்). டிஜிட்டல் 3டி முறையில் சமீபத்தில் வெளிவந்த 'அவதார்' போன்ற படங்களை பெரிய நகரங்களில் மட்டுமே பார்க்கும் வசதி இருந்தது. ஆனால், இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்சும், நவோதயாவும் இணைந்து எல்லா நகரங்களிலும், எல்லா கிராமங்களிலும், ஒரே நாளில், ஒரே நேரத்தில் தமிழக மக்கள் கண்டுகளிக்கும் வகையில் உருவாக்கியுள்ளனர். சீனாவிலிருந்து ஸ்டைலான 3டி கண்ணாடிகளை இதற்காக வரவழைத்திருக்கிறார்கள். டிஜிட்டல் 3டி முறையில் தமிழகத்திலேயே முதல் முறையாக சுமார் 70 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
26 வருடங்களுக்கு முன்பு மை டியர் குட்டி சாத்தானை எடுத்த இயக்குநர் ஜிஜோவே இப்படத்தை இயக்கி இருக்கிறார். இயக்குநர் இராம நாராயணன் தயாரித்துள்ளார். இளையராஜாவின் இசைக்கு வைரமுத்துவின் மகன் மதன் கார்கி பாட்டெழுதியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











