அமீருக்கு பாராட்டு விழா

By Staff

 Ameer
சினிமா பிரஸ் கிளப் சார்பில் இயக்குநர் அமீருக்கு வருகிற திங்கள்கிழமை மாலை பாராட்டு விழா நடைபெறுகிறது.

பருத்தி வீரன் படத்துக்கு பெர்லின் சர்வதேச திரைப்பட விழா (பெர்லினாலே)வில் சிறந்த இயக்குநருக்கான சிறப்பு விருது பெற்றதற்காக இந்த பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

திரைப்படப் பத்திரிகையாளர்கள் அமைப்புகளில் ஒன்றான சினிமா பிரஸ் கிளப் வருகிற திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு பிலிம்சேம்பர் திரையரங்கில் இவ்விழாவை நடத்துகிறது.

இதுகுறித்து இந்த கிளப்பின் செயலாளர் ராமானுஜம் கூறுகையில், அமீருக்குக் கிடைத்திருக்கும் கவுரவம் சாதாரணமானதல்ல. ஒட்டு மொத்த திரையுலகமும் அவருக்கு பெரிய பாராட்டு விழா எடுத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அப்படி ஒரு முயற்சி நடக்கவில்லை. அதற்கு முதல்படியாக பத்திரிகையாளர்கள் எடுக்கும் இந்த விழா அமையட்டும் என்றார்.

திரையுலகின் முக்கிய பிரபலங்கள் மற்றும் அனைத்து திரைப்பட சங்கங்களிலிருந்தும் பிரதிநிதிகள் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள். ஏற்கெனவே அமீர் சைப்ரஸ் விழாவில் ராம் படத்துக்காக விருது பெற்ற போதும் பத்திரிகையாளர் சங்கம் பாராட்டு விழா எடுத்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X