எங்களுக்கும் ஏதாவது கொடுங்க! - சேரன்

By Staff

Cheran and Navya Nair
கிரிக்கெட் வீரர்கள் சிக்ஸர் அடித்தால் ஒரு சிக்சருக்கு இவ்வளவுன்னு கொடுக்கிறாங்க. அது போல விருது வாங்கற எங்களுக்கும் ஏதாவது கொடுங்க", என்றார் இயக்குநரும் நடிகருமான சேரன்.

கனிமொழி என்ற படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது.

இந்தப் படத்தின் தலைப்பை, முதல்வரின் மகள் கனிமொழி எம்பியின் அனுமதியோடு வைத்திருக்கிறார்களாம். கனிமொழி என்று பெயர்வைத்துவிட்டதாலோ என்னமோ, விஐபிக்கள் ஏராளமாய் குவிந்திருந்தனர்.

விழாவில் எல்லோருக்கும் மாலை சால்வை போட்டு மரியாதை செய்தனர். சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற பாலாவுக்கு விசேஷமாக சால்வை மற்றும் பூங்கொத்து வழங்கினர்.

விழாவில் இயக்குநர் சேரனைப் பேச அழைத்தபோது, இந்த சால்வை - மாலை அணிவித்தலைக் குறிப்பிட்டு இப்படிப் பேசினார்:

விருது பெற்ற கலைஞர்களை பாராட்ட மாலை சாலை போடாதீங்க. அதனால் என்ன பயனிருக்கிறது?

கிரிக்கெட்டில் அடிக்கிற சிக்ஸருக்கெல்லாம் பரிசு தர்றாங்க. அது போல பாலா, என்னைப் போன்றவர்கள் வாங்குகிற விருதுகளுக்கும் பரிசு கொடுக்கலாம். பணமா, நிலமா... அது என்னைப் போன்றவர்களுக்கு நிஜமாகவே உதவியா இருக்கும்.

வீட்டு மனை மாதிரி பரிசு கொடுத்தால் அது இன்னும் நல்லாருக்கும். அப்புறம் பாருங்க எத்தனை விருதுகளை வாங்குகிறோம் என்று..." என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X