கெளதம் இயக்கம்..அஜீத் நடிக்கவிருந்த படத்தில் சூர்யா!

அஜீத்தை வைத்து போலீஸ் கதை ஒன்றை படமாக்கவிருந்தார் கவுதம் மேனன். ஆனால் இந்தப் படம் துவங்குவதற்கு முன்பே கவுதமுக்கும் அஜீத்துக்கும் முட்டிக் கொண்டது. இதைத் தொடர்ந்து அஜீத் பற்றி மோசமாக கமெண்ட் அடித்தார் கவுதம் மேனன். இதனால் கொதித்துப் போன அஜீத் ரசிகர்கள் கவுதமை கடுமையாக விமர்சித்தனர்.
இப்போது, அஜீத்துக்காக தயார் செய்திருந்த அந்தக் கதையை சூர்யாவை வைத்து இயக்க கவுதம் முடிவு செய்துள்ளார்.
இதுவும் போலீஸ் கதைதான். ஆனால் சூர்யாவுக்கு ஏற்றமாதிரி சில மாறுதல்களைச் செய்துள்ளாராம் கவுதம்.
ஏற்கெனவே சூர்யாவும் கவுதமும் காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களில் இணைந்துள்ளனர். இவற்றில் காக்க காக்க போலீஸ் கதைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் துவங்குமுன், கமல் நடிக்கும் புதிய படம் குறித்தும் கவுதம் அறிவிக்க உள்ளாராம்.
Comments


Click it and Unblock the Notifications