ட்வென்டியத் பாக்ஸ் செஞ்சுரியுடன் கைகோர்க்கும் கவுதம் மேனன்!

சமீரா ரெட்டி நடிக்க கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் த்ரில்லர் படமான நடுநிசி நாய்கள் படப்பிடிப்பு முடிந்தது. விரைவில் இந்தப் படம் திரைக்கு வருகிறது. இதில் நாயகனாக நடிப்பவர் வீரா. கவுதம் மேனனின் உதவியாளர் இவர்.
இந்தப் படம் தவிர, வெப்பம் மற்றும் அழகர் சாமியின் குதிரை ஆகிய இரு படங்களையும் அவர் தயாரிக்கிறார்.
இதில் அழகர் சாமியின் குதிரை படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். வெண்ணிலா கபடிக் குழுவை இயக்கிய சுசீந்திரன் இயக்குகிறார்.
இந்தப் படங்களை முடித்ததும், தனது இந்திப் படத்தை இயக்குகிறார் கவுதம். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்திப் பதிப்பான இந்தப் படத்தின் தயாரிப்பில், அவருடன் கைகோர்க்கிறது ஹாலிவுட்டின் ட்வென்டியத் பாக்ஸ் செஞ்சுரி.
ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
More from Filmibeat
20th fox century கவுதம் மேனன் ட்வென்டியத் பாக்ஸ் செஞ்சுரி நடுநிசி நாய்கள் விண்ணைத் தாண்டி வருவாயா goutham menon nadunisi naaigal


Click it and Unblock the Notifications











