ரஹ்மானுக்குத் தாவும் கெளதம்

மின்னலே தொடங்கி லேட்டஸ்டாக வெளியான வாரணம் ஆயிரம் வரை கெளதம் மேனனும், ஹாரிஸ் ஜெயராஜும் இணைந்து கலக்கினர். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
இதையடுத்து தனது அடுத்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானை முடிவு செய்துள்ளார் கெளதம் மேனன்.
தற்போது சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தை இயக்கி வரும் கெளதம் அதை முடித்து விட்டு சுறா என்ற புதிய படத்தை இயக்கப் போகிறார்.
இப்படத்தில் தெலுங்கு இளம் நாயகன் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் இயக்குகிறார் கெளதம்.
இப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என இசைப் புயலிடம் கேட்டுள்ளாராம் கெளதம்.
இந்தப் புதிய கூட்டணி இசை ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என நம்பலாம்.
More from Filmibeat
arrahman ஏஆர்ரஹ்மான் கெளதம் மேனன் சினிமா சுறா தமிழ் ஹாரிஸ் ஜெயராஜ் cinema gowtham menon harris jayaraj sura


Click it and Unblock the Notifications











