twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நல்ல நடிப்பிருந்தும் தோற்ற குஸாரிஷ்!

    By Sudha
    |

    Aishwarya Rai and Hrithik Roshan
    ஹிருத்திக் ரோஷனின் சிறப்பான நடிப்பு, ஐஸ்வர்யா ராயின் இருப்பு என நல்ல விஷயங்கள் இருந்தும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த குஸாரிஷ் இந்திப் படம் தோல்வி அடைந்துள்ளதாம்.

    பாராபிளஜிக் நோயால் பாதிக்கப்பட்டவராக இப்படத்தில் நடித்துள்ளார் ரோஷன். அவருக்கு வீட்டோடு இருந்து உதவும் நர்ஸாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

    படத்தில் ரோஷனின் நடிப்பு பெரும் பாராட்டுக்களைக் குவித்துள்ளது. தனது குடும்பத்தோடு படத்தை வீட்டில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், ஹிருத்திக்கின் நடிப்பைப் பார்த்து அசந்து போய் விட்டார்.

    உடனே போனை எடுத்தவர், ஹிருத்திக்கைத் தொடர்பு கொண்டு எங்கிருந்தாலும் உடனே என் வீட்டுக்கு வரவும் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார். என்னவோ ஏதோ என்று பதறிப் போன ஹிருத்திக் தனக்கு இருந்த காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் ஷாருக்கின் வீட்டுக்கு விரைந்தார். வந்த பின்னர்தான், தனது படத்தைப் பார்த்து ஷாருக் கான் குடும்பமே நெகிழ்ந்து போய் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து மகிழந்தார்.

    பின்னர் ஷாருக் குடும்பத்தோடு அமர்ந்து அவரும் படத்தைப் பார்த்து ரசித்தார். படத்தை முடித்த பின்னர் ஷாருக்கும், ஹிருத்திக்கும் விடிய விடிய உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்களாம். இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதும், அவர்களது மனைவிமார்கள் இவர்களை விட நெருங்கிய தோழிகள் என்பதும் இங்கு உபரித் தகவல்.

    இப்படி ஹிருத்திக்கின் நடிப்பு பெரும் பாராட்டுக்களைக் குவித்த போதிலும், ஐஸ்வர்யா ராய் நடித்த படம் என்ற போதிலும், சஞ்சய் லீலா பன்சாலியின் படம் என்றாலும், படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியைத் தழுவியுள்ளதாம்.

    கிட்டத்தட்ட ரூ. 60 கோடியில் எடுக்கப்பட்ட படம் இது. ஆனால் அதை திரும்பப் பெறும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.

    இருப்பினும் இந்தப் படத்தை தோல்விப் படமாக கருத முடியாது, மாறாக காலத்தால் அழியாத காவியப் படம் என்ற வரிசையில் இது இடம் பெறும் என்று பாலிவுட்டில் புகழ்கிறார்கள்.

    எபப்படி குருதத்தின் காகஸ் கா ஃபூல், ராஜ் கபூரின் மேரா நாம் ஜோக்கர், யாஷ் சோப்ராவின் லம்ஹே ஆகியவை பாக்ஸ் ஆபீஸில் தோல்விப் படங்களாக அமைந்தாலும் இன்று வரை காவியப் படங்களாக புகழப்படுகிறதோ அதேபோல குஸாரிஷும் நாளை புகழப்படும் என்கிறார்கள்.

    ரசிகர்களைப் புரிந்து கொள்ள முடிவதே இல்லை. நல்ல படங்களைத் தந்தால் ரசித்து வரவேற்க தயக்கம் காட்டுகிறார்கள். அதேசமயம், உப்புச்சப்பில்லாத படங்களை ஓஹோவென ஓட வைக்கிறார்கள்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X