ஜோ-சூர்யாவுக்கு ஜே!

'ஆட்டிசம்' (autism ) நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் டாக்குமெண்ட்ரியில்தான் ஜோ நடிக்க சம்மதித்துள்ளார். அதில், சூர்யாவுடன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
வெறும் 5 நிமிடம் ஓடக்கூடிய இந்த படத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசின் வேண்டுகோளை ஏற்று தயாரிக்க சம்மதித்துள்ளார் சூர்யா.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே படத்தின் நோக்கம்.
சத்தமில்லாமல் பொது நலப் பணிகளை செய்து வரும் சூர்யாவின் அடுத்தக் கட்ட முயற்சிதான் இந்த டாக்குமென்டரி. படத்தில் விஜய், மாதவன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இயக்குனர்கள் மணிரத்னம், ராஜீவ் மேனன் ஆகியோர் படப்பிடிப்புக்குத் தேவையான உபகரணங்களை இலவசமாக வழங்குகின்றனர். படத்தில் நடிக்கும் அனைவரும் சம்பளம் பெறாமல் இலவசமாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணா மூச்சி ஏனடா பட இயக்குனர் பிரியா இந்த படத்தை இயக்குகிறார். கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஜோதிகாவுக்கு தாராளமாக வெல்கம் சொல்லலாம்.


Click it and Unblock the Notifications











