கமல் - செல்வராகவன் படம்... 'விஸ்வரூபம்'?

ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கமல் நடிக்கும் புதிய படம வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் ஏப்ரலில் இந்தப் படம் தொடங்குகிறது.
புதுமையான படம் என்று செல்வராகவன் தரப்பில் சொல்லப்பட்டாலும், தொன்னூறுகளில் வெளியான தி சீக்ரெட் ஆப் லேம்ப்ஸ் மற்றும் 2001-ம் ஆண்டு வெளிவந்த அதன் தொடர்ச்சி ஹன்னிபல் மற்றும் எண்பதுகளில் கலக்கிய மேன் ஹன்டர் ஆகியவற்றின் கலவையாக இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் தமிழ் சினிமாவுக்கேற்ற வகையில் இதன் திரைக்கதையை செல்வராகவன் அமைத்துள்ளதாக தெரிகிறது.
திரைக்கதை அமைப்புப் பணியை கமலும் செல்வராகவனும் முழுமையாக முடித்துவிட்டனர். இந்தப் படத்துக்கு விஸ்வரூபம் என தலைப்பிட்டுள்ளனர். இப்போதைக்கு தற்காலிக தலைப்பாக இது இருக்கட்டும் என்றும் தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம் என்றும் கமல் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
விஸ்வரூபம் என்பது சிவாஜி கணேசன் நடித்து எழுபதுகளின் இறுதியில் வெளிவந்த படத்தின் பெயர். இப்பெயரையே இப்போது கமல் படத்திற்கு வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











