கைட்ஸ்: தரத்தில் சுமார்.. வசூலில் சூப்பர்!

கடந்த வெள்ளியன்று இந்தியாவிலும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தப்படம் வெளியானது. சமீப காலமாக இந்திப் படங்கள் வெளிநாடுகளிலும் சக்கை போடு போடுவதால், கைட்ஸ் படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட்டனர்.
இந்தப் படத்தில் நாயகியாக பார்பராமோரி நடித்துள்ளார். வெளியான முதல் வாரத்தில் இந்தப்படம் அமெரிக்கா பாக்ஸ் ஆபீசில் 5-வது இடத்தை இப்படம் பிடித்துள்ளது.
கஜினி, மை நேம் இஸ் கான், 3 இடியட்ஸ் பட வரிசையில் இந்தப் படமும் வசூல் சாதனை செய்து வருவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தரத்தில் இந்தப் படம் சுமார்தான் என்று விமர்சனங்கள் வெளியாகி வருவதால், இந்த சாதனை தொடருமா என்பது தெரியவில்லை. இந்தியாவில் திங்கள்கிழமை முதல் இந்தப்படத்துக்கு கூட்டம் குறைய ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், விக்ரம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடித்து அடுத்த மாதம் ரிலீசாக உள்ள ராவண் இந்தி மற்றும் ராவணன் தமிழ்ப் படங்களையும் அதிக பிரிண்டுகளுடன் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். படம் அதிக நாட்கள் ஓடாவிட்டாலும், இப்போதுள்ள எதிர்ப்பார்ப்பை முதல் சில தினங்களிலேயே காசாக்கிவிடலாம் என்ற புதிய உத்தியின் விளைவு இது.


Click it and Unblock the Notifications











